அதிமுக பாஜக உறவானது பிரிந்ததற்கு முக்கிய காரணம் அண்ணாமலை தான் என பலரும் அறிந்த ஒன்று. மீண்டும் இதன் கூட்டணியானது சேரும் என எதிர்பார்த்து வரும் நிலையில், அதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு வழங்கி விடக்கூடாது என்ற நோக்கத்தோடு அண்ணாமலை உள்ளார். இவரின் நடவடிக்கையை எதிர்த்து கட்சிக்குள் இருப்பவர்களே பலரும் கண்டனம் தெரிவித்து வருவதுண்டு. அது மட்டுமின்றி தொடர்ச்சியாக தமிழகத்தில் தோல்வியையே சந்தித்து வரும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை.
இருக்கும் தருணத்தை பயன்படுத்தி நம் கல்லா கட்டிக் கொள்ள வேண்டும் என்பதிலும் அண்ணாமலை உறுதியாக உள்ளார். இதனாலே மேலிடத்தின் மீது சில குறைகளையும் அவ்வபோது தெரிவித்து வருகிறார். இது அனைத்தும் அவரின் பதவி மேல் அவருக்கிருக்கும் ஈடுபாடற்ற தன்மையை காட்டுகிறது. இவ்வாறு ஒரு புறம் இருக்க திமுக அரசியலில் மிகவும் மூத்த அரசியல்வாதி என்றால் துரைமுருகன் தான். ஒவ்வொரு மேடையிலும் தனது பேச்சாலே பல சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் ரஜினி குறித்து இவர் பேசியது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியதோடு அதற்கு மன்னிப்பு கூறும் அளவிற்கு கீழே இறங்கியும் வந்தார். அது மட்டுமின்றி பல இடங்களில் அரசியல் பயணத்தில் கட்டாயம் நாம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய அரசுக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றியும் கொள்கிறார்.
இதனை பல நடவடிக்கைகள் மூலம் நாம் கண்கூட பார்க்க முடிகிறது. ஒரு பக்கம் மூத்த அரசியல்வாதி தன்னை நிலை நிறுத்திக் கொள்ள போராடி வருவதையும் மற்றொருபுறம் இளம் அரசியல்வாதி தனது பதவியை வைத்து ஆளுமை மற்றும் ஈடுபாட்டற்ற தன்மையை காட்டி வருவதையும் பார்க்க முடிகிறது. அதேபோல ஆளும் திமுக-வானது மத்திய அரசிடமிருந்து சில நலத்திட்டங்களை பெற மேலிடத்திற்கு வளைந்து கொடுத்து செல்கிறது.
காலப்போக்கில் பாஜகவுடன் கூட்டணி உருவாகுவதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதற்காகவே அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்பதில் தீர்க்கமாக உள்ளார்.