Actress Raadhika Sarathkumar: ஹேமா கமிட்டி பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில் நடிகை ராதிகா தனக்கு நடந்த கசப்பான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
கேரளாவின் ஹேமா கமிட்டி அறிக்கை தான் தற்பொழுது சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. கேரளா சினிமா வட்டாரத்தில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து விவரிக்கும் விதமாக 2017 ஆம் ஆண்டு அறிக்கை ஒன்றை தயார் செய்தனர். இதில் பலதரப்பட்ட மிகவும் பிரபலமான ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்கள் என பல பெயர்கள் சிக்கி உள்ளது.
இது எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வரக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தனர். ஆனால் கேரளா திரையுலகில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையானது அதிகரித்த பட்சத்தில் கடந்த 19ஆம் தேதி இதனை வெளியிட நேரிட்டது. இதில் மிகவும் பிரபலமான இயக்குனர் ரஞ்சித் எனத் தொடங்கி பிரபல நடிகர் வரை பலரது பெயரும் வெளியானது. இதனையெல்லாம் கண்டும் ஏன் கேரளா நடிகர் சங்கம் தலைவர்கள் ஏதும் கேட்கவில்லை என்று கேள்வியும் எழுந்தது. இதனால் அதிரடியாக நடிகர் சங்கம் தலைவர் மோகன்லால் முதல் 16 நபர்கள் ராஜினாமா செய்ய நேரிட்டது.
இதனைத் தொடர்ந்து பல தரப்பு நடிகைகளும் தாமாகவே முன்வந்து பாலியல் வன்கொடுமைக்கு ஈடுபட்டதை குறித்து கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகை ராதிகா அவர்கள் கூறியதாவது, கேரளத் திரையுலகில் நாங்கள் உடைமாற்றும் மற்றும் மேக்கப் போடும் கேரவனில் ரகசிய கேமரா ஒன்று இருக்கும். இது எங்களுக்கே தெரியாமல் பொருத்தப்பட்டிருக்கும்.
நாங்கள் உடைமாற்றுதல் போன்றவற்றை பதிவு செய்து அதனை ரசித்துப் பார்ப்ர். இவ்வாறு செய்வதை நான் பார்த்துள்ளேன். மறைமுகமாக வீடியோ எடுக்கப்படுகிறது என்ற காரணத்தினாலேயே நான் ஹோட்டல் அறைக்கு சென்று துணியை மாற்றி வருவேன் என தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை கூறியுள்ளார்.