உடனே இந்த சோதனையை செய்யுங்கள்.. இந்த 4 மாவட்டத்தில் தான் பாதிப்புக்கள் அதிகம்!! அலார்ட் செய்த அமைச்சர்!!

Photo of author

By Rupa

SALEM: சமீப காலமாக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைவரும் இதற்குரிய சோதனையை செய்து கொள்ளுமாறு அமைச்சர் மா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் பாதிப்பால் லட்சக்கணக்கானோர் வருடம் தோறும் உயிரிழந்து வருகின்றனர். பல விழிப்புணர்வானது இது குறித்து நடத்தியும் பெருமளவில் யாரும் இதனை கண்டு கொள்வதில்லை. குறிப்பாக பெண்கள் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் என பலவற்றால் பெரிதும் பாதிப்படைகின்றனர். இதனையெல்லாம் தடுக்கும் விதமாக முன்கூட்டியே இதற்குரிய தடுப்பூசியை பெண்கள் செலுத்தி கொள்ளலாம்.

ஆனால் இதற்கென்று பெரிய விதிமுறைகள் ஏதும் இல்லா காரணத்தினாலும் விழிப்புணர்வற்றவையாலும் பெரிதளவில் பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது. இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசியுள்ளார். அதில் அவர் கூறும் பொழுது, 18 வயதை கடந்த இளைஞர்களுக்கு தான் சமீப காலமாக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இது குறித்து மக்கள் எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமல் உள்ளனர். கட்டாயம் ஒவ்வொருவரும் இதற்குரிய புற்றுநோய் சோதனையை செய்து கொள்வது அவசியம். அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலானோருக்கு இந்த சோதனை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டத்தினரும் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரம்பகட்ட காலத்திலேயே புற்றுநோயை கண்டறிந்தால் கட்டாயம் காப்பாற்றி விடலாம். இதனை அப்படியே விட்டுவிட்டு அடுத்த கட்டத்திற்கு செல்லும் பொழுது உயிரிழப்பை  சந்திக்க நேரிடுகிறது.

அதேபோல ராணிபேட்டை,கன்னியாகுமரி, திருப்பத்தூர், ஈரோடு உள்ளிட்ட இந்த நான்கு மாவட்டங்களில் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமானோர் உள்ளனர் என தெரிவித்தார்.