vinayagar chaturthi 2024: விநாயகர் சதுர்த்தி என்றால் என்ன? எப்படி வழிபட்டால் நம்மை கிடைக்கும்!!

0
173
Lord Ganesha who solves difficulties.. If you worship with these flowers, you will get crores of benefits!!
Lord Ganesha who solves difficulties.. If you worship with these flowers, you will get crores of benefits!!

உலகின் முதற் மூத்த கடவுள் என்று போற்றப்படும் விநாயகர் யானை முகத்துடன் தோன்றிய நாளை தான் விநாயகர் சதுர்த்தி என்று இந்து மக்கள் கொண்டாடுகின்றனர்.பலரின் இஷ்ட தெய்வனமாக விநாயகர் வினை தீர்ப்பதில் வல்லவர்.நமக்கு நேர்ந்த எப்பேர்ப்பட்ட தடைகள்,துன்பங்களையும் நீக்கி வெற்றியையும்.ஞானத்தையும் அளிக்க கூடியவர் விநாயகர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வளர்பிறை நாளில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.அதன்படி வருகின்ற செப்டம்பர் 7(சனிக்கிழமை) அன்று விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாட மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.தென் மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி என்றும் வட மாநிலங்களில் கணபதி சதுர்த்தி என்றும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையில் வண்ணம் பூசி வீடுகளிலும்,கோயில்களிலும்,பொது இடங்களிலும் வைத்து சிறப்பு பூஜைகள் நடித்தப்படுவது வழக்கம்.இந்நாளில் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை,மோதகம்,அப்பம்,அவல் உள்ளிட்டவைகளை படைத்து வழிபாடு நடத்தப்படும்.அதன் பின்னர் 3 அல்லது 5 என்று ஒற்றைப்படை நாளில் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று இறுதியாக நீர் நிலைகளில் கரைக்கின்ற வைபவம் நிகழும்.

விநாயகர் சதுர்த்தி தினத்தில் தலைக்கு குளித்து விட்டு சுத்தமான ஆடை அணிந்து கொண்டு விநாயகரை பிடித்த நெய் வேதியத்தை படைத்து வழிபட்டால் வாழ்வில் கல்விச் செல்வம்,பண வரவு செல்வம் வளம் உள்ளிட்டவை அதிகமாகும்.

Previous articleபொதுமக்களுக்கு அடுத்தடுத்து ஷாக்.. உயரப்போகும் பேருந்து கட்டணம்!! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!!
Next articleஉங்கள் குழந்தையின் வறட்டு இருமல் சட்டென்னு நிக்க தேனுடன் இதை கலந்து 1 ஸ்பூன் கொடுங்கள்!!