பெண்களின் உடல் அமைப்பு அவர்களை இன்னும் அழகாக காட்டுகிறது.சருமத்தை பராமரிப்பதால் மட்டும் அழகு கூடாது.உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகும்.
பெரும்பாலான பெண்களின் அழகு அவர்களின் பின் பக்க சதையால் குறைந்துவிடுகிறது.பெண்களின் பின் பக்கத்தில் காணப்படும் அதிகமான சதை அவர்கள் நடக்கும் போது அசிங்கமாக காட்டும்.இதனால் வெளியில் செல்லவே பல பெண்கள் தயக்கம் கொள்கின்றனர்.
பின் பக்க சதையை குறைக்க மருந்து மாத்திரையில் தீர்வு இல்லை.இதற்கு உடற்பயிற்சி ஒன்று மட்டுமே தீர்வாக இருக்கிறது.
ஸ்டெப் அப்(படி ஏறுதல்)
இது சுலமான பயிற்சி தான்.உங்கள் வீட்டு படியில் ஏறி,இறங்கி பயிற்சி செய்ய வேண்டும்.முதல் நாளில் ஐந்து நிமிடங்களுக்கு படி ஏறி,இறங்கலாம்.அதற்கு அடுத்த நாளில் இருந்து நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்.இவ்வாறு செய்வதால் பின் பக்க சதைகள் எளிதில் குறைந்துவிடும்.
தோப்புக்கரணம்
சிறு வயதில் பள்ளிகளில் தோப்புக்காரணம் போடாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.இது உடலுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சி ஆகும்.தினமும் காலை நேரத்தில் 20 முதல் 30 தோப்புக்கரணம் போடுவதை வழக்கமாக்கி கொண்டால் பின் பக்கத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்துவிடும்.இந்த உடற்பயிற்சி உடலை ஆரோக்கியப்படுத்த உதவுகிறது.
குந்து பயிற்சி
இது சற்று கடினமான உடற்பயிற்சி தான்.தொடக்கத்தில் இந்த பயிற்சி செய்வதற்கு சிரமமாக தோன்றினாலும் பிறகு எளிமையாகிவிடும்.உங்கள் கால்கள் இரண்டையும் நெருக்கமாக வைத்துக் கொண்டு கைகள் இரண்டையும் நீட்டியபடி உட்கார்ந்து எழுதல் வேண்டும்.இவ்வாறு 10 நிமிடங்களுக்கு பயிற்சி செய்து வந்தால் பின் பக்க சதைகள்,வயிறு சதை,தொடை சதை அனைத்தும் குறைந்து உடல் பிட்டாக காட்சியளிக்கும்.
தரையில் நேராக படுத்துக்க கொள்ளவும்.பிறகு வலது காலை மட்டும் தூக்கி கடிகார திசையில் சுழல விடவும்.அதன் பிறகு இடது காலை மட்டும் தூக்கி சுழல விடவும்.இப்படி செய்தால் பின் பக்க சதை மற்றும் தொடை சதை குறையும்.