விநாயகர் சிலை வீட்டுக்கு வந்தபின் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை!!

0
145
Lord Ganesha who solves difficulties.. If you worship with these flowers, you will get crores of benefits!!
Lord Ganesha who solves difficulties.. If you worship with these flowers, you will get crores of benefits!!

விநாயகர் சதுர்த்தி வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.எடுத்த காரியம் வெற்றியடைய விநாயகரை வணங்குவது ஐதீகம்.மிகவும் எளிமையாக சக்தி வாய்ந்த கடவுளான விநாயகருக்கு உகந்த அவணி வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்துக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலையை வாங்கி வைத்து சிறப்பான பூஜை செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.அதற்கு முன்னர் விநாயகர் சிலை வாங்கும் போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.

நீங்கள் வாங்கும் விநாயகர் சிலையில் தும்பிக்கை இடது புறத்தில் இருக்க வேண்டியது அவசியம்.அதேபோல் விநாயகரின் வாகனமான இருப்பவர் எலியார்.நீங்கள் வாங்கும் விநாயகர் சிலையுடன் எலியார் இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும்.

இவ்வாறு பார்த்து வாங்கப்பட்ட விநாயகர் சிலையை வீட்டிற்கு கொண்டு வந்த பிறகு சில விஷயங்களை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.விநாயகர் சிலையை வாங்குவதற்கு முன்னர் வீட்டை சுத்தப்படுத்த வேண்டும்.பிறகு நேர்மறையான விஷயங்கள் இல்லத்தை சுற்றி இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

விநாயகர் சிலையை வீட்டிற்குள் கொண்டு வருவதற்கு முன்னர் ஆரத்தி எடுக்க வேண்டும்.பிறகு கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி விநாயகர் சிலையை வைக்கவும்.குறைந்தது மூன்று தினங்கள் விநாயகருக்கு பூஜை செய்து அவருக்கு பிடித்த லட்டு,மோதகம்,கொழுக்கட்டை போன்ற நெய்வேத்தியங்களை படைத்து வழிபட வேண்டும்.

விநாயகருக்கு முன் ஏற்றப்படும் தீபம் அணையாமல் எரியும்படி பார்த்துக் கொள்ளவும்.இந்த மூன்று நாட்களும் மலர்கள் மற்றும் மாலைகளால் பிள்ளையாரை அலங்கரிக்க வேண்டும்.விநாயகர் சிலை வீட்டில் இருக்கும் போது அசைவ உணவுகளை செய்யவோ சாப்பிடவோ கூடாது.வீட்டில் எதிர்மறை விஷயங்களை பேசவோ,தவறான சொற்களை பேசவோ கூடாது.