பயணத்தின் போது வெளியில் தண்ணீர் பாட்டில் வணங்குவதை பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.பாட்டிலில் அடைத்து விற்கப்படும் தண்ணீர் எந்த நிறுவனத்துடையது என்று பார்த்து வாங்கும் பலர் அது அளவிற்கு சுத்திகரிக்கப்பட்டுள்ளது,அது எந்த வகை நீர் என்பதை பார்ப்பதில்லை.
வாட்டர் பாட்டிலில் ஒட்டியிருக்கும் லேபிளில் ஆங்கில சொற்கள் இடம் பெற்றிருப்பதால் வாங்கிய தண்ணீர் எத்தன்மை உடையது என்று கண்டறிய சிலர் சிரமமப்படுகின்றனர்.ஆனால் வாட்டர் பாட்டில் மூடியின் நிறத்தை வைத்தே நீரின் தன்மையை எளிதில் கண்டறிந்துவிடலாம்.
வெள்ளை நிற மூடிகள்
நீங்கள் வாங்கும் வாட்டர் பாட்டிலின் மூடியின் நிறம் வெள்ளையாக இருந்தால் அது பதப்படுத்தப்பட்ட நீர் என்று அர்த்தம்.இதில் கனிம சத்துக்கள் இல்லை என்றாலும் புத்துணர்வு கிடைக்க இந்நீரை அருந்தலாம்.
கருப்பு நிற மூடிகள்
நீங்கள் வாங்கும் வாட்டர் பாட்டில் மூடியின் நிறம் கருப்பாக இருந்தால் அது அல்கலைன் நீர் ஆகும்.இந்நீர் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
பச்சை நிற மூடிகள்
நீங்கள் வாங்கும் வாட்டர் பாட்டிலில் மூடி பச்சை நிறத்தில் இருந்தால் அது சுவைக்காக சில பொருட்கள் சேர்க்கப்பட்ட தண்ணீர் என்று அர்த்தம்.இது தண்ணீரின் இயற்கை சுவையை குறிக்கிறது.
நீல நிற மூடிகள்
நீங்கள் வாங்கும் வாட்டர் பாட்டிலில் மூடி நீல நிறத்தில் இருந்தால் அது நீரூற்றுகளில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் என்று அர்த்தம்.இது தாதுக்கள் நிறைந்த நீராக கருதப்படுகிறது.
மஞ்சள் நிற மூடிகள்
நீங்கள் வாங்கும் வாட்டர் பாட்டிலில் மூடி மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது வைட்டமின் மற்றும் செறிவூட்டப்பட்ட நீர் இருப்பதை உணர்த்துகிறது.இதில் மேம்படுத்தப்பட்ட வைட்டமின்கள் மற்றும் ஊட்டசத்துக்கள் உள்ளது.இந்நீரை குடிப்பதால் தாகம் கட்டுப்படுகிறது.
சிவப்பு நிற மூடிகள்
நீங்கள் வாங்கும் வாட்டர் பாட்டிலில் மூடி சிவப்பு நிறத்தில் இருந்தால் அது எலக்ட்ரோலைட் மற்றும் மேம்படுத்தப்பட்ட நீர் இருப்பதை குறிக்கிறது.அதிக நீரிழப்பு பிரச்சனை இருப்பவர்கள்,உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்நீர் சிறந்த தீர்வாக இருக்கிறது.