அனைவருக்கும் நிறம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.இது நபருக்கு நபர் மாறுபடுகிறது.குறிப்பாக அந்தரங்க பகுதியின் நிறம் உடலில் மற்ற பகுதிகளை விடவும் மாறுபட்டு காணப்படும்.
சரும நிறத்தை காட்டிலும் அந்தர பகுதி சற்றுடார்க் நிறத்தில் இருக்கும்.இது கருப்பாக இருபவர்களுக்கு மட்டுமின்றி கலராக இருபவர்களுக்கும் பொருந்தும்.காரணம் பிறப்புறுப்பு பகுதியில் காற்றோட்டம் இல்லாமல் அவ்விடத்தில் அதிகளவு வியர்வை வெளியேறுகிறது.இதனால் பிறப்புறுப்பை சுற்றி உள்ள இறந்த செல்கள் வெளியேற வழியின்றி அவ்விடத்திலேயே தேங்கிவிடுகிறது.இதன் காரணமாகவே அவ்விடத்தை சுற்றி அடர் கருமையாக இருக்கிறது.
நமது உடலில் இருக்கின்ற மற்ற பகுதிகளை காட்டிலும் பிறப்புறுப்பு பகுதியே அதிக சென்சிட்டிவானது.இதனால் அவ்விடத்தை கவனமாக பராமரிக்க வேண்டியது அவசியம்.இன்று பலர் தங்களது பிறப்புறுப்பு பகுதியில் காணப்படும் கருமையை நீக்க கெமிக்கல் க்ரீம்களை பயன்படுத்துகின்றனர்.இவ்வாறு செய்வது நல்லதா என்றால் நிச்சயம் இல்லை என்பது தான் மருத்துவர்களின் பதில்.
கெமிக்கல் கலந்த கண்ட க்ரீம்களை பயன்படுத்துவதால் அவ்விடத்தில் இன்பெக்சன் ஏற்ப்பட வாய்ப்புள்ளது.அர்புடின்,ஹைட்ரோகுவினோன்,கோஜிக் அமிலம் போன்ற கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தி இவ்வகை க்ரீம்கள் தயாரிக்கப்படுகிறது.இது ஒரு ப்ளீச்சிங் ஏஜெண்டாக மாறி பிறப்புறுப்பு பகுதியை சுற்றி இருக்கும் கருமையை நீக்குகிறது.ஹைட்ரோகுவினோன் உள்ள க்ரீம்கள் புற்றுநோய் செல்களை உருவாக்கும் அபாயம் கொண்டிருக்கிறது.அது மட்டுமின்றி நீங்கள் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.
உங்கள் பிறப்புறுப்பு பகுதியில் காணப்படும் நிறம் இயற்கையானது.அதை மாற்ற நினைப்பது முட்டாள் தனமான விஷயம்.எனவே கெமிக்கல் க்ரீம்களை பிறப்புறுப்பில் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.