நடிகர் விஜய் அவர்களும் அவருடயை மனைவி சங்கீதா அவர்களும் விவாகரத்து பெறவுள்ளதாக பரவி வரும் செய்திகளுக்கு நடிகர் விஜய் அவர்கள் சூசகமாக பதில் அளித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் நடிகர் விஜய் அவர்கள் நடிப்பில் நேற்று(செப்டம்பர்5) தி கோட் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் தற்பொழுது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
நடிகர் விஜய் அவர்கள் தன்னுடைய தீவிர ரசிகையான சங்கீதா அவர்களையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதாவது சங்கீதா அவர்கள் இலங்கையை சேர்ந்த தீவிர விஜய் ரசிகை ஆவார். இந்நிலையில் சங்கீதா நடிகர் விஜய் அவர்களை பார்க்க சென்னை வந்துள்ளார். அப்பொழுது நடிகர் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் காதல் மலர இருவருடௌய வீட்டாரின் சம்மதத்துடன் நடிகர் விஜய் மற்றும் சங்கீதா காதல் திருமணம் செய்து கொண்டனர்.
நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் ஜேசன் சஞ்சய் என்ற மகனும் ஷாசா என்ற மகளும் இருக்கின்றனர். மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். மகள் ஷாசா படிப்புக்காக வெளிநாட்டுக்கு செல்ல மகள் துணைக்கு சங்கீதா அவர்களும் வெளிநாடு சென்றுள்ளார். இதற்கு பிறகு நடிகர் விஜய் அவர்களும் சங்கீதா அவர்களும் விவாகரத்து செய்யவுள்ளதாக கூறப்பட்டு வருகின்றது.
இவர்களின் இந்த முடிவுக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகள் தான் காரணம் என்று செல்லப்பட்டு வருகின்றது. அதாவது நடிகர் விஜய் அவர்களுடன் இணைந்து நடித்த நடிகை திரிஷா அவர்கள் தான் முக்கிய காரணம் என்று கூறப்பட்டு வருகின்றது.
அதாவது நடிகர் விஜய் அவர்கள் தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டுதான் எந்தவொரு விழாவாக இருந்தாலும் செல்வார். திரைப்படங்களின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சிகளுக்கு நடிகர் விஜய் அவர்கள் தன்னுடைய மனைவி சங்கீதாவுடன் தான் வருவார். ஆனால் மாஸ்டர். திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு நடிகர் விஜய் அவர்களை சங்கீதாவுடன் பார்க்க முடியவில்லை. மேலும் இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையால்தான் சங்கீதா லண்டனிலேயே இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இது ஒரு புறம் இருக்க நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இருவரும் வெளிநாட்டில் ஷாப்பிங் செய்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகி மேலும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் இது குறித்து நடிகர் விஜய் ஒன்றும் செல்லாமல் அமைத்து காத்தது இந்த பிரச்சனையை மேலும் பரபரப்பாக்கியது.
இது மட்டுமில்லாமல் நடிகர் விஜய் அவர்களின் பிறந்த நாளுக்கு நடிகை திரிஷா அவர்கள் புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து சொன்னது, வாரிசு சக்சஸ் மீட்டுக்கு சம்பந்தம் இல்லாமல் நடிகை திரிஷா வந்தது போன்றவை அனைத்தும் இந்த விவாகரத்து பிரச்சனைக்கு மேலும் காரணமாக அமைந்தது.
இந்த மட்டுமில்லாமல் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களையும் நடிகர் விஜய் அவர்களையும் ஒப்பிட்டு பேசத் தொடங்கினர். இதற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் நடிகர் விஜய் இருக்கும் வீட்டின் அருகே குடியேறியதுதான் முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. அது மட்டுமில்லாமல் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் விஜய் அவர்கள் தொடங்கிய கட்சியில் எனக்கு ஒரு சீட் வேண்டும் என்று கேட்டது தமிழகத்தில் அடுத்த எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இருவரும் நடிகர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் என்றளவுக்கு பேச வைத்தது. இவ்வாறு பல நடிகைகளை நடிகர் விஜய் அவர்களுடன் ஒப்பிட்டு பேசத் தொடங்கினர். இந்நிலையில் இவை அனைத்துக்கும் நடிகர் விஜய் தற்பொழுது சூசகமாக பதில் அளித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அதாவது நடிகர் விஜய் நடித்த தி கோட் திரைப்படம் நேற்று(செப்டம்பர்5) வெளியான நிலையில் சென்னையில் நடிகர் விஜய் அவர்கள் அவருடைய குடும்பத்துடன் தி கோட் திரைப்படத்தை பார்த்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதாவது நடிகர் விஜய் அவர்கள் அவருடைய மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய், மகள் ஷாசா, தந்தை எஸ்.ஏ சந்திரசேகர், தாய் ஷௌபா ஆகியோருடன் திரைப்படம் பார்த்ததாக கூறப்படுகின்றது. அப்பொழுது படத்தை பார்த்த மனைவி சங்கீதா மகிழ்ச்சி அடைந்து உயர். இருந்த வெங்கட் பிரபு அவர்களை பாராட்டி பேசினார் என்று கூறப்படுகின்றது.
நடிகர் விஜய் அவர்கள் அவருடைய மனைவி சங்கீதா, மகள், மகன், தாய், இந்த தந்தை ஆகியோருடன் இணைந்து தி கோட் படம் பார்த்தவன் மூலம் நடிகை திரிஷா அவர்களுடனான ரிலேஷன்ஷிப் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நடிகை திரிஷா திருப்பாச்சி, கில்லி, ஆதி, லியோ ஆகிய திரைப்படங்களில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.