8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு முடித்தவர்கள் சொந்த தொழில் தொடங்கும் வகையில் திமுக தலைமையிலான தமிழக அரசு தற்பொழுது பதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பொறியியல், கலை அறிவியல், தொழிற் பயிற்சி பள்ளிகள் என பல கல்வி நிறுவனங்களில் இருந்தும் லட்சக் கணக்கான மாணவர்கள் பயின்று ஒவ்வொரு வருடமும் வேலை தேடிவருகின்றனர். அவர்களுக்கு வேலை வழங்கும் விதமாக தமிழக அரசும் பல பயிற்சிகள் மற்றும் தேர்வதுள் நடத்தி வேலை வாய்ப்புகளை வழங்குகின்றது.
தமிழக அரசு போலவே தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களும் தொழிற்பயிற்சிகள் அளித்து மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருகின்றது. இந்நிலையில் தொழில் செய்து தொழிலதிபராக வர வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நபர்களுக்கு கூட தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் 8வது மற்றும் 10ம் வகுப்பு படித்திருக்கும் நபர்களுக்கு இலவசமாக தொழில் பயிற்சி வழங்கி தொழிலதிபராக மாற்றுவதற்கு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகின்றது. இது தொடர்பாக தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் வீட்டு உபயோக பொருட்களை உருவாக்குவதற்கான இலவச பயிற்சியில் வரும் செப்டம்பர் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதே போல டிஜிட்டல் மார்கெட்டிங் தொடர்பான நேரடி பயிற்சி வகுப்பானது செப்டம்பர் 25ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் மட்டுமில்லாமல் மேலும் சில ஆன்லைன் தொடர்பான அனைத்து பயிற்சிகளும் இந்த டிஜிட்டல் மார்கெட்டிங் பயிற்சி வகுப்பில் கற்றுத்தரப்படவுள்ளது. அதாவது டிஜிட்டல் மார்கெட்டிங், தரவுகளை கையாளுதல், டிஜிட்டல் நிலப்பரப்பை புரிந்து கொள்வது, சைபர் விதிமுறைகள், மார்கெட்டிங் உத்திகள், சமூக ஊடகங்கள், SEO, கட்டண விளம்பரம், இலக்கு பார்வையாளர்களை அடையாளம் காணுவது, உத்திகள் மற்றும் பார்வையாளர்களை பிரிப்பது எப்படி, சந்தை தேவைகளை உருவாக்குதல் போன்ற பல வகையான ஆன்லைன் படிப்புகள் தொடர்பான பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படவுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் 10ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த நபர் 18 வயதை பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள முன்பதிவு செய்ய வேண்டும். இந்த பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு தங்கும் வசதியும் குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்து தரப்படவுள்ளது. இந்த டிஜிட்டல் மார்கெட்டிங் பயிற்சி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.editn.in என்ற இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
அதே போல வீட்டு உபயோகத்திற்கு தேவைப்படும் இரசாயன பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை அளிக்கவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயிற்சியில் ரூம் ஃப்ரெஷ்னர் திரவம், சானிடைசர், துரு நீக்கும் திரவம், சோப்பு எண்ணெய், டைல்ஸ் கிளீனர் போன்ற வீட்டு உபயோக பொருட்களை எவ்வாறு தயார் செய்வது தொடர்பான பயிற்சி இந்த வகுப்பில் அளிக்கப்படவுள்ளது.
மேலும் இந்த பொருட்களை சந்தைப்படுத்துவது எவ்வாறு, இதற்கான மூலப்பொருட்கள் எங்கு வாங்குவது, இந்த பொருட்களை எவ்வாறு சோதனை செய்வது தொடர்பான பயிற்சிகளும் இந்த வகுப்பில் அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள 8ம் வகுப்பு மட்டும் தேர்ச்சி அடைந்திருத்தால் போதும். மேலும் 18 வயது பூர்த்தி அடைந்த நபர்களாக இருக்க வேண்டும். இந்த பயிற்சி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.editn.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கி
ன்றது.