TVK: தவெக மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி இல்லை!! கண்டிஷன் போட்ட விஜய்!!

TVK: தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் மாநாட்டில் சிறார்களுக்கு அனுமதி இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தனது திரை பயணத்தை முடித்துவிட்டு தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அரசியல் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட அளவில் முதல் மூன்று இடத்தை பிடித்த 10 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவும் வருடம் தோறும் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் கட்சி கொடி பாட்டு என அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது. இவை இரண்டையும் வெளியிட்டவுடன் விஜய் பல சர்ச்சைகளுக்கு ஆளாகினார்.

தற்பொழுது விக்ரவாண்டி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய்க்கு பெரியவர்களை காட்டிலும் அதிகப்படியான சிறார்கள் தான் அதிக வரவேற்பு அளிக்கின்றனர். ஆனால் அவர்களை ஏமாற்றும் வகையில் தற்பொழுது புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெறும் மாநாட்டில் கட்டாயம் சிறார்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ளனர். இதனால் மாநாட்டிற்கு வரும் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களின் குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என்ற நிபந்தனையை வைத்துள்ளனர்.