Trisha: நடிகை த்ரிஷா மீது பிரபல தயாரிப்பாளர் சம்மளம் வழங்குவது குறித்து குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
நடிகை த்ரிஷா விஜய் அஜித் என டாப் ஹீரோக்களுடன் பட ஹிட் படங்களில் நடித்து வருகிறார். தற்போதைய 41 வது வயதிலும் மார்க்கெட் குறையாமல் பார்த்துக் கொள்கிறார். இவ்வாறு இருக்கையில் இவரால் நஷ்ட மடைந்த இயக்குனர் ஒருவர் த்ரிஷா குறித்து பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான தயாரிப்பாளர் கிரிதர் மாமிட்டிபள்ளி. இவர் த்ரிஷாவை வைத்து படம் ஒன்றை தயாரித்தார். ஆனால் அந்த படம் முற்றிலும் பிளாப்பாகியுள்ளது.
அதுகுறித்து அவர் கூறுகையில், நான் முதன் முதலில் த்ரிஷாவை சந்தித்து கால்ஷிட் பெற்று விட்டேன். ஆனால் அவர் கொடுத்த டைமில் எனது கதை முழுமையாக தயாராகாததால் அச்சமயத்தில் பாலையாவுடன் சேர்ந்து வேறொரு படத்தில் நடித்து வந்தார். பின்பு எனது கதை தயாரானது, அது முழுக்க முழுக்க ஆணித்தரமான பெண் திரைப்பட கதையாக இருந்தது. ஆனால் அந்த கதை நன்றாக இல்லை என த்ரிஷா நடிக்க மறுத்துவிட்டார்.
இதன் நடுவே இயக்குனர் கோவர்த்தன ரெட்டி ஒரு கதையை எடுத்து வந்தார். அது மிகவும் நன்றாக உள்ளது, அதில் நடிக்கிறேன் என த்ரிஷா விருப்பம் தெரிவித்தார். படத்தின் ஆரம்ப கட்டத்திலிருந்து நன்றாக சென்று கொண்டு இருந்த நிலையில் திடீரென இயக்குனர் ரெட்டி மற்றும் த்ரிஷாக்கிடையே சிறிய பிளவு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு சரியாக நடத்த முடியவில்லை.
பின்பு இயக்குனர் த்ரிஷாவிடம் சென்று படத்தின் பட்ஜெட் 10 கோடியை தாண்டி செல்லும் நிலையில் உங்களுக்கு சம்பளம் ஒரு கோடி தர மாட்டார்களா என்று ஏற்றிவிட்டார். அவர் பேச்சைக் கேட்டு, விடாது த்ரிஷா தனது சம்பளமாக ஒரு கோடி வாங்கிக் கொண்டார். ஆனால் படம் வெளியாகி போட்ட பணத்தை கூட எடுக்க முடியாத நிலைமைதான் ஆனது. என்னை சிறிதும் புரிந்து கொள்ளாமல் த்ரிஷா செய்த செயலால் நஷ்டம் ஏற்பட்டு எனது வாழ்க்கையே வீணாகிவிட்டது என புலம்பி தள்ளியுள்ளார்.