#TETOJAC Protest: அரசு பள்ளிகள் இயங்காது.. ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி எச்சரிக்கை!!

0
473
#TETOJAC Protest
#TETOJAC Protest

#TETOJAC Protest: டிட்டோஜாக் போராட்டம் மூலம் எந்த ஒரு பள்ளியிலும் மாணவர்கள் கற்றலுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என தொடக்ககல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார்.

தொடக்க கல்வி ஆசிரியர்கள் தங்களின் 31 கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என இன்று ஒரு நாள் டிட்டோஜாக் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த போராட்டம் குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எந்த ஒரு ஆசிரியரையும் வற்புறுத்தி இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வைக்க கூடாது என்றும் மேலும் வற்புறுத்துபவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த போராட்டத்தினால் எந்த ஒரு பள்ளியிலும் மாணவர்களின் கற்றலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என கூறியுள்ளார். மேற்கொண்டு இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு பள்ளிகளில் சரிவர ஆசிரியர்கள் இல்லாமல் பாடங்கள் எடுக்கப்படாமல் இருந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது அனைத்து பள்ளி வட்டார கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியும் வைக்கப்பட்டுள்ளது.

Previous articleஇந்த 10 பாட்டி வைத்திய டிப்ஸ் தெரிந்தால் இனி மருத்துவரை சந்திக்க வேண்டியதில்லை!!
Next articleஉங்களுடைய வீட்டின் முன் No Parking போர்ட் வைத்துள்ளீர்களா? அப்போ உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!