இன்று அனைவரது வீடுகளிலும் குளிர்சாதன பெட்டி பயன்படுத்தப்படுகிறது.உணவுகளை பதப்படுத்த,காய்கறிகளை சேமிக்க குளிர்சாதன பெட்டி பெரிதும் உதவுகிறது.ஆனால் இன்று உடல் ஆரோக்கியத்தை கெடுக்க கூடிய பல உணவுகளை பிரிட்ஜில் சேமித்து உண்ணும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இதனால் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்து அவை உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்
பொருளாக மாறிவிடுகிறது.சிலவகை உணவுப் பொருட்களை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது.ஆனால் இன்று அனைத்து வகை பொருட்களையும் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தி வருகிறோம்.இதனால் உடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்படுகிறது.
பிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள்:
1)மைதா பிரட்
இது சுத்திகரிக்கப்பட்ட உணவு வகையாகும்.இதில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் நீக்கப்பட்ட பிறகே நமக்கு பிரட் கிடைக்கிறது.இப்படி சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் உடலுக்கு ஆபத்து ஏற்படும்.
2)இறைச்சி
அசைவ உணவுகள் மற்றும் பதப்படுத்தபட்ட இறைச்சியில் உணவு சமைத்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.
3)தயிர்
சுவையூட்டப்பட்ட தயிரை பிரிட்ஜில் பதப்படுத்தி உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் பாதித்துவிடும்.
4)கெட்சப்
இதில் அதிக கலோரிகள் நிறைந்துள்ளது.கெட்சப்பில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுவதால் இதை அதிகமாக உட்கொள்ளும் போது உடலில் பல பாதிப்புகள் ஏற்பட்டுவிடும்.
5)சோடா
பிரிட்ஜில் சோடாக்களை வைத்து பயன்படுத்தினால் உடலுக்கு பல கெடுதல்கள் ஏற்பட்டுவிடும்.
6)உருளைக்கிழங்கு
பிரிட்ஜில் உருளைக்கிழங்கை சேமித்து பயன்படுத்தக் கூடாது.இது நச்சுப் பொருளாக மாற அதிக வாய்ப்பிருக்கிறது.பிரிட்ஜில் வைத்த உருளைக்கிழங்கு உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் போது செரிமான அமைப்பில் பாதிப்பு உண்டாகிவிடும்.