TN Police: போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் மீறி செயல்படுபவர்களுக்கு புதிய முறையில் அபராதம் வசூல் செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது.
தற்பொழுது தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மக்கள் மீறுவது தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. அந்த வகையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் மேல் வழக்குகள் பதியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது.
இருப்பினும் மக்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் ஹெல்மட் அணியாமலும் அதிவேகமாகவும் வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இதை தடுக்க அபராதத் தொகையை போக்குவரத்து துறை மேலும் அதிகரித்தது. இதையடுத்து சாலைகளில் வைக்கப்பட்டு இருக்கும் சிக்னல்களில் கேமராக்களை பொருத்தி அதன் மூலமாக போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்படுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு போக்குவரத்து சிக்னல்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டத்தை அடுத்து சென்னையில் மட்டும் ஒரு நாளுக்கு சுமார் 6000 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதியப்பட்டு வருகின்றது. அவ்வாறு விதிமீறல் வழக்குகளுக்கு அபராதம் விதிக்கப்படும் நபர்கள் அனைவரும் அபராதத் தொகையை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்று ஆன்லைன் மூலமாக அபராதத் தொகை செலுத்தும் திட்டம் கடந்த 2017ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
அந்த வகையில் தற்பொழுது போக்குவரத்து விதிகளை மீறி வழக்குகள் பதியப்பட்டு அபராதம் செலுத்தும் நபர்களுக்கு தற்பொழுது புதிய நடைமுறை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது இனிமேல் விதிமீறல் மூலமாக அபராதம் செலுத்தும் நபர்கள் கியூஆர் கோடு மூலமாகவும் அபராதம் செலுத்தலாம் என்று சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
கியூஆர் கோடு மூலமாக அபராதத் தொகையை செலுத்தும் வசதியை சென்னை பெருநகர காவல்துறையானது எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து உருவாக்கியுள்ளது. அந்த வகையில் அபராதம் செலுத்தும் நபர்கள் https://echallan.parivahan.gov.in.index/accuschallan என்ற இணையதளம் வாயிலாகவும் செலுத்தலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.