Anuradha: நடிகையிலிருந்து ஐட்டம் டான்சராக மாற்றிய இயங்குனர் குறித்து அனுராத வெளிப்படையான பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
சினிமாவில் 80 மற்றும் 90களில் மிகவும் ஃபேமஸான நடிகை மற்றும் ஐட்டம் டான்ஸ் என்றால் சுலோச்சனா தான். இவரது இயற்பெயர் சுலோச்சனா என்றாலும் திரையுலகில் அனுராதா என்று கூறினால் தான் அனைவருக்கும் தெரியும். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் பெரிய நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனால் அவருக்கு அது எதுவும் கை கொடுக்கவில்லை. இவர் ஐட்டம் டான்ஸராக உச்சிக்கு வந்த பிறகுதான் பலரும் இவரை அடையாளம் காண ஆரம்பித்தனர். இவர் ஒரு பேட்டியில் தான் ஏன் ஐட்டம் டான்சர் ஆனேன் என்பது குறித்து விளக்கமாக கூறியுள்ளார்.
அதில், நான் 34 படங்களுக்கு மேல் ஹீரோயினாக நடித்து விட்டேன். நான் நடித்த அனைத்து படங்களும் பிளாப் தான். இதனால் என்னை முற்றிலும் ராசியற்ற நடிகை என கூறினர். இவ்வாறு இருக்கும் பொழுது தான் நான் நடிகை சாந்தியின் கணவர் வில்லியம்ஸ் ஒரு படத்தை இயக்கியதில் நான் ஹீரோயினியாக நடித்து வந்தேன். அப்பொழுது ஓர் சோலோ பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆட இருந்தது. அதனை என்னை செய்ய சொன்னார்கள். ஆனால் நான் முடியவே முடியாது என்று கூறிவிட்டேன். பின்பு ரகு மாஸ்டர் என்னை சந்தித்து, சினிமாத்துறையில் வந்து விட்டால் வரும் வாய்ப்பை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என பல அட்வைஸ் செய்தார். அதன் பிறகு நான் அந்த பாடலை முடித்துக் கொடுத்தேன்.
ஆனால் ஹீரோயினாக கிடைக்காத வரவேற்பு இந்த ஒரு பாடலின் மூலம் எனக்கு கிடைத்தது. இந்த ஒரு பாடலை கடந்த அடுத்தடுத்த பாடல்கள் அனைத்தும் எனக்கு பெரும் ஹிட் அடித்தது. எந்தெந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் என்னை ராசி இல்லாதவள் எனக் கூறினார்களோ அவர்களே தங்களது படத்தில் ஒரு பாடலுக்காவது ஐட்டம் டான்ஸ் ஆடி கொடுங்கள் என்று கேட்கும் நிலை வந்தது. இதில் எனக்கு பெயரும் புகழும் பெருமளவில் சேர்த்தது. இது அனைத்தும் எனது முந்தைய வலிகளை மறக்க ஏதுவாக அமைந்தது. இப்படி தன் திரையுலக அனுபவத்தை சுலோச்சனா கூறியுள்ளார்.