S. S. ராமசாமி படையாட்சியார் பிறந்த நாள்! தமிழக முதல்வர் மரியாதை

0
206
S. S. Ramasami Padayatchiyar
S. S. Ramasami Padayatchiyar

சமூக நீதிக்காக போராடியவரும், சுதந்திரபோராட்ட வீரருமான S. S. ராமசாமி படையாட்சியார் (S. S. Ramasami Padayatchiyar) 107 வது பிறந்தநாள் இன்று  கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் S. S. ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கிண்டியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலையிட்டு, படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பொன்முடி, மா சுப்பிரமணியன், சேகர் பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

S. S. ராமசாமி படையாட்சியார் தமிழக உழைப்பாளர் கட்சியை தொடங்கியவர். அதன் மூலமாக காமராஜர் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த அதிமுக ஆட்சியில் S. S. ராமசாமி படையாட்சியாரின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleசளி உடனே குணமடைய வேண்டுமா? அப்போ ஓமத்தை இப்படி செய்யுங்க! 
Next articleதமிழக வெற்றிக் கழகம் மாநாடு தேதி மாற்றமா? வெளியான தகவல்