பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.பெண்கள் கல்வி,பொருளாதாரம்,தொழில் உள்ளிட்டவைகளில் மேன்மையடைய வேண்டுமென்ற நோக்கில் பல்வேறு சலுகைகள் மற்றும் நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பெண்கள் சுயமாக தொழில் தொடங்க லக்பதி திதி யோஜனா என்ற வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் பெண்களுக்கு வட்டியின்றி ரூ.5,00,000 வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் மூலம் கடன் பெறும் பெண்கள் அசலை மட்டும் திருப்பி செலுத்தினால் போதுமானது.
சுய உதவிக்குழுவில் உள்ள பெண்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற முடியும்.கேட்கப்படும் ஆவணங்கள் மற்றும் தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கைகளுடன் லக்பதி திதி யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம்.இத்திட்டம் பெண்களின் வருவாய் மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதை முதன்மை நோக்கமாக கொண்டிருக்கிறது.
லக்பதி திதி யோஜனா திட்டம்
*சுய உதவிக் குழுவில் உறுப்பினராக உள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பித்து பயன்பெற முடியும்.
*18 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
*இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000க்கு கீழ் இருக்க வேண்டும்.
லக்பதி திதி யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்:
1.ஆதார் அட்டை
2.பான் அட்டை
3.வருமானச் சான்றிதழ்
4.பேங்க் பாஸ் புக்
5.தொலைபேசி எண்
6.சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழ்
ஆன்லைன் அல்லது சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று லக்பதி திதி யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம்.