நவீன உலகம் உடை நாகரிகத்தில் புதுமையை கண்டு வருகிறது.பெண்கள் தாங்கள் அணியும் உடைகள் அழகாக வெளிப்பட ப்ரா எனும் மேல் உள்ளாடை அணிவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
மார்பகத்தை அழகாக எடுப்பாக காட்ட ப்ரா அணியப்படுகிறது.ப்ளன்ச் ப்ரா,மினிமைசர் ப்ரா,டி ஷர்ட் ப்ரா என்று பல வகைகள் இருக்கிறது.இதில் பேட் ப்ராக்களை பெரும்பாலான பெண்கள் விரும்பி அணிகின்றனர்.ப்ராவில் தொப்பி அதாவது தடிமனான கப் வைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருக்கும்.
பேட் வைத்த ப்ரா அணிய எளிதாகவும்,சௌகரியத்தையும் கொடுக்கும் என்பதால் பருவம் அடைந்த குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை அனைவரும் அணிகின்றனர்.பேட் பிராக்கள் எடை குறைவாகவும்,இலகுரக பட்டை வைத்தும் தைக்கப்பட்டிருக்கும்.
சிறிய மார்பகங்கள் கொண்ட பெண்கள் பேட் ப்ரா அணிவதால் மார்பகத்தின் தோற்றம் எடுப்பாகவும் வட்ட வடிவிலும் வெளிப்படும்.இதனால் கவர்ச்சியான மார்பகமாக அவை வெளிப்படுகிறது.
உங்கள் மார்பக அளவிற்கு ஏற்ற ப்ரா தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.டி ஷர்ட்,பிளவுஸ் போன்றவற்றிற்கு சாதாரண ப்ரா அணிவதை தவிர்த்து பேட் ப்ரா அணியப் பழகுங்கள்.உங்கள் மார்பக அளவை மெருகூட்ட பேட் ப்ரா அணியலாம்.
மார்பக அளவிற்கு ஏற்ற பேட் ப்ரா அணிவதால் நம்பிக்கை அதிகரிக்கிறது.பேட் ப்ரா உடைகளில் உங்களை அழகாக காட்டுகிறது.ஆனால் இரவு நேரத்தில் இறுக்கமான உள்ளாடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.இதனால் சரும பிரச்சனை,இரத்த ஓட்ட பாதிப்பு ஏறபடக்கூடும்.