DMK: “உதயநிதி வேண்டாம்”அமைச்சர் துரைமுருகனுக்கு முதல்வர் பதவி.. எழுந்த முக்கிய கோரிக்கை!!

0
2522
DMK: "No Udhayanidhi" Chief Minister's post for Minister Duraimurugan.. the main demand!!

 

 

உதயநிதி ஸ்டாலின் எப்பொழுது துணை முதல்வர் பதவி வகிப்பாரென்று பலரும் எதிர் பார்த்து வரும் நிலையில் அதிமுக சார்பாக புதிய கோரிக்கை ஒன்று எழுந்துள்ளது.நேற்று மதுரை வாடிபட்டியில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பொது கூட்டம் ஒன்று நடைபெற்றது.இதில் மாஜி அமைச்சர் உதயகுமார் கலந்துக் கொண்டார்.அதில் அவர் பேசும் பொழுது உதயநிதி துணை முதல்வராவது குறித்து திமுக-விற்கு எதிராக பல கேள்விகளை எழுப்பினார்.

குறிப்பாக, கடந்த தேர்தலில் தனது மகன் துணை முதல்வர் பதவிக்கு வருவார் என்று ஏன் கூற வில்லை.அதேபோல நிகழ்சிகளில் தனது பக்கத்தில் தனது மகனை அமர வைத்து விட்டு கட்சிக்காக அயாரது உழைத்த மூத்த நிர்வாகிகளுக்கு ஏன் கீழே இடம் ஒதுக்கப்பட்டுது?? இதன் மூலம் உங்களது சர்வதிகாரம் தெரிகிறது.இதில் எங்கே திராவிட அரசியல் மற்றும் அண்ணா உள்ளார்??

அதேபோல வெளிநாட்டிற்கு சென்று அங்கிருந்து கொண்டு வந்த முதலீடுகளை பற்றி ஏன் வெள்ளை அறிக்கை சமர்பிக்கவில்ல.அதை ஏன் மறைக்க வேண்டும்?? இதற்கு பதில் தான் தற்பொழுது உதயநிதியை துணை முதல்வர் பதவியில் ஏற்ற துடித்து வருகிறார்.வெளிநாட்டிலிருந்து எந்த ஒரு முதலீட்டையும் கொண்டு வரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.தற்பொழுது தனது மகனை துணை முதல்வர் பதவியில் அமர்த்துவதற்கு பதிலாக மூத்த அமைச்சரான துரைமுருகனை அமர்த்தலாமே என்ற கோரிக்கையையும் வைத்தார்.

Previous articleபள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு!! தமிழக அரசு வழங்கும் 1 லட்சம்!! 
Next articleபர்ஸ்னல் கேள்விகளை கேட்ட தொகுப்பாளர்! கடுப்பாகி மைக்கை தூக்கி எரிந்து சென்ற நடிகர் தனுஷ்!