நடிகர் தனுஷ் அவர்கள் ஒரு திரைப்படத்தின் புரொமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது அவரிடம் தொகுப்பாளர் பர்ஸ்னல் கேள்விகளை கேட்ட நிலையில் கடுப்பான நடிகர் தனுஷ் அவர்கள் மைக்கை தூக்கி எரிந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.
நடிகர் தனுஷ் அவர்கள் இயக்கி நடித்து வெளியான ராயன் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சனம் ரீதியாக வெற்றி பெறவில்லை. ஒரு சிலருக்கு நன்றாக பிடித்த ராயன் திரைப்படம் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து தற்பொழுது நடிகர் தனுஷ் அவர்கள் தொடர்ந்து பிசியான நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் தற்பொழுது இயக்குநர் ஷேகர் கம்மூலா இயக்கத்தில் குபேரா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் தன்னுடைய சகோதரி மகனை வைத்து திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து நான்காவதாக ஒரு திரைப்படம் இயக்கி நடித்து வருவதாகவும் அதில் அருண் விஜய் மற்றும் நித்யா மேனன் இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் ஹிந்தியில் ஒரு திரைப்படத்திலும் ஹாலிவுட் சினிமாவில் ஒரு திரைப்படத்திலும் நடிகர் தனுஷ் அவர்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் நடிகர் தனுஷ் புரொமோசன் நிகழ்ச்சி ஒன்றிலிருந்து கோவம் அடைந்து மைக்கை தூக்கி எரிந்து விட்டு சென்றதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
அதாவது நடிகர் தனுஷ் கடந்த 2017ம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளைய மகளான சௌதர்யா ரஜினிகாந்த் அவர்களின் இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி, அமலா பால், ஹிந்தி நடிகை கஜோல் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படம் 2017ம் ஆண்டு வெளியான நிலையில் அதன் முந்தைய பாகமான வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தை விட சுமாராகத் தான் இருந்தது. ரசிகர்கள் மத்தியிலும் வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தின் புரொமோசன் நிகழ்ச்சிகளில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். அப்பொழுது தொகுப்பாளர் ஒருவர் நடிகர் தனுஷ் அவர்களிடம் சுசி லீக்ஸ் குறித்து ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு நடிகர் தனுஷ் “நான் திரைப்படங்களில் நடிப்பதில் பிசியாக இருக்கின்றேன். அதனால் இதைப்பற்றி எல்லாம் நான் கண்டு கொள்ளமாட்டேன்” என்று கூறியுள்ளார்.
இருப்பினும் விடாமல் மீண்டும் மீண்டும் அந்த தொகுப்பாளர் நடிகர் தனுஷ் அவர்களிடம் சுசி லீக்ஸ் குறித்து கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்தார். நடிகர் தனுஷ் அவர்களிடம் அந்த தொகுப்பாளர் “சுசி லீக்ஸ் சம்பவத்தால் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகின்றது” என்று கேட்கும் பொழுதே நடிகர் தனுஷ் அவர்கள் கோவமடைந்தார்.
இதையடுத்து நடிகர் தனுஷ் அவர்கள் அந்த தொகுப்பாளரிடம் “நான் மன உளைச்சலுக்கு ஆளானேன் என்று நான் கூறினேனா? யார் சொன்னது அப்படி? அதை நான் யாரிடமாவது சொல்லியிருக்கேனா? என்னுடைய தனிப்பட்ட விஷயங்கள் குறித்து உங்களிடம் கூற வேண்டும் என்ற எந்தவித கட்டாயமும் அவசியமும் இல்லை.
உங்களுடைய பர்ஸ்னல் விஷயங்களை என்னிடம் சொல்வீர்களா? அனைவருக்கும் தனியுரிமை என்பது உள்ளது. உங்களுடைய இந்த கேள்விகளுக்கு எல்லாம் என்னால் பதில் அளிக்க முடியாது. இது ஒரு முட்டாள் தனமான கேள்வி ஆகும்” என்று கூறினார்.
இதையடுத்து மைக்கை கழட்டி வீசி எரிந்து விட்டு நடிகர் தனுஷ் சென்றார். பின்னர் சேனல் தரப்பில் இருந்து நடிகர் தனுஷ் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்யப்பட்ட பின்னர் நடிகர் தனுஷ் அவர்கள் வேண்டா வெறுப்புடன் படத்தை பற்றி சில நிமிடங்கள் பேசிவிட்டு பின்னர் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகின்றது.