அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து முக்கியமான முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
தமிழக அரசியலில் தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வராக பதவியேற்பாரா இல்லையா என்பது பற்றி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. தற்பொழுது விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களே தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டாம் என்று கூறி வருகின்றார்.
அதே போல முதல்வர் முக. ஸ்டாலின் அவர்களும் உதயநிதி அவர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்த எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்று தெரிகின்றது. இருப்பினும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வர் தான் என்று கட்சி தொண்டர்கள் அடித்து கூறி வருகின்றனர். மேலும் துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் முக்கிய முடிவை எடுத்துள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றது.
அதாவது முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து திமுக கட்சியின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியதாக தெரிகின்றது. இந்த கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, பொருளாளர்டி.ஆர் பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஆகியோர் கலந்து கொண்டதாகவும் அவர்கள் அனைவரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் டெல்லி சென்று பிரதமர் மோடி அவர்களை சந்தித்து பேசவுள்ளார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் டெல்லி சென்ற பிறகு துணை முதல்வர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வேறு திட்டம் வைத்துள்ளதாக தெரிகின்றது.
அதாவது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சிறையில் இருந்து வெளியில் வரலாம் என்பதால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும். அதனால் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற திட்டத்திலும் மேலும் செந்தில் பாலாஜி அவர்கள் சிறையில் இருந்து வருவதற்குள் உதயநிதி அவர்களுக்கு துணை முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்ற திட்டத்திலும் இருப்பதாக தெரிகின்றது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதல்வர் பதவியை வழங்குவதை ஒரு நல்ல நாள் பார்த்து பின்னர் வழங்க வேண்டும் என்று குடும்பத்தார் கூறியுள்ளனர் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது உதயநிதி குடும்பத்தார் இது குறித்து உங்களுக்கு வேண்டுமானால் நல்ல நாள் என்பதில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அதில் முழுவதும் நம்பிக்கை இருக்கின்றது. நீங்கள் பதவிக்கு வருவது என்பது மிகச் சிறப்பான நல்ல காரியம். எனவே அது நல்ல நாளில் தான் நடக்க வேண்டும்.
எனவே துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்வதை ஒரு நல்ல நாள் பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. எனவே முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதல்வர் பதவியை ஒரு நல்ல நாளில் வழங்கவுள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றது.