வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் கரப்பான் பூச்சி நடமாட்டம் அதிகரித்து நோய் தொற்றுகள் ஏற்பட்டுவிடும்.சமையலறை,கழிவறை,வீட்டின் மூலை முடுக்குகளில் ஒளிந்திருக்கும் கரப்பான் பூச்சியை விரட்ட கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள்.
1)பெப்பர்மின்ட் ஆயில்
ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றவும்.பிறகு அதில் 25 மில்லி பெப்பர்மின்ட் ஆயில் சேர்த்து கலக்கவும்.இதை கரப்பான் பூச்சி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்து விட்டால் அதன் தொல்லை நீங்கும்.
2)இலவங்கம்
10 இலவங்கத்தை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.இதை ஸ்ப்ரே பாட்டிலில் கொட்டி 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்யவும்.கரப்பான் பூச்சி நடமாட்டம் உள்ள இடத்தில் இதை ஸ்ப்ரே செய்தால் அதன் தொல்லை நீங்கும்.
3)எலுமிச்சை சாறு
ஒரு முழு எலுமிச்சம் பழத்தின் சாறை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்யவும்.இதை கரப்பான் பூச்சி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அவை வீட்டை விட்டு ஓடிவிடும்.
4)கற்பூரம்
பூஜைக்கு பயன்படுத்தும் சூடம் சிறிதளவு எடுத்து தூளாக்கி கொள்ளவும்.இதை கரப்பான் பூச்சி நடமாடும் இடமான சமையலறை,மூலை முடுக்குகளில் தூவி விட்டால் அதன் நடமாட்டம் கட்டுப்படும்.
5)பூண்டு
10 பூண்டு பற்களை தோல் நீக்கி இடித்துக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு கப் நீரில் சேர்த்து கலக்கவும்.இதை நாள் முழுவதும் ஊறவிடவும்.பிறகு இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலுக்கு வடிகட்டி கரப்பான் பூச்சி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அவை வீட்டை விட்டு வெளியேறிவிடும்.
6)வினிகர்
150 மில்லி தண்ணீரில் 50 மில்லி வினிகர் கலந்து கரப்பான் பூச்சி நடமாடும் இடத்தில் ஸ்ப்ரே செய்யவும்.இதன் மூலம் கரப்பான் பூச்சி நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும்.