Government School Teacher: டிடோஜாக் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் படி டிடோஜாக் அமைப்பு மூலம் இம்மாதம் தொடக்கத்தில் போராட்டம் ஒன்றே நடத்தினர். இந்தப் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே அனைத்து கல்வி அலுவலகங்களுக்கும் அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில், இந்த போராட்டத்திற்காக எந்த ஒரு ஆசிரியரையும் கட்டாயப்படுத்தக்கூடாது மேற்கொண்டு அவ்வாறு செய்யும்பொழுது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
அதேபோல எந்தெந்த பள்ளிகளில் ஆசிரியரின்றி பாடங்கள் எடுக்கப்படாமல் உள்ளதோ அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தனர். ஆனால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களே பாடம் எடுக்கும் சூழல் உண்டானது. அதன் புகைப்படங்களும் இணையத்தில் பரவியது. கிட்டத்தட்ட 30 சதவீத ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேற்கொண்டு டிட்டோஜாக் அமைப்பிடம் பள்ளிக்கல்வித்துறை பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சில கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்துள்ளது. இதனையடுத்து தற்பொழுது அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பானது ஆசிரியர்கள் மத்தியில் தற்பொழுது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.