உதயநிதி துணை முதலமைச்சர் ஆவாரா இல்லையா? நான்கே வார்த்தையில் பதில் அளித்த முதல்வர் முக.ஸ்டாலின்!

 

தற்பொழுது தமிழக அமைச்சரவையில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சராக பதவியேற்பாரா இல்லையா என்பது குறித்து கேள்வி கேட்க்கபட்ட நிலையில் அதற்கு நான்கே வார்த்தையில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பதில் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமாகிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார். பின்னர் திமுக கட்சியில் இளைஞர் அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

பின்னர் 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை திருவல்லிக்கேணி தொகுதியில் நின்று எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார். அதன் பின்னர் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சராக பதவியேற்பார் என்று பேசப்பட்டு வந்த நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவவியேற்றார்.

இதையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அமெரிக்கா சென்றநிலையில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று பேசப்பட்டு வந்தது. அதற்கு முன்பு இருந்தே உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று தகவல்கள் பரவி வந்தது. இருந்தாலும் இது குறித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக கட்சியின் முப்பெரும் விழா முதல்வர் மற்றும் திமுக கட்சியின் தலைவருமான முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் அண்ணா விருது, பெரியார் விருது, பாவேந்தர் விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டது.

அந்த விழாவில் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் அவர்கள் “உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சராக வேண்டும் அல்லவா? உங்களை பேராசிரியர் அன்பழகன் துணை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டதை போலவே நாங்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களை துணை முதலமைச்சராக ஏற்றுக் கொள்வோம். காலம் தாழ்த்தாமல் அறிவிப்பை வெளியிடுங்கள்” என்று பேசினார். இதையடுத்து திமுக கட்சியில் தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்பொழுது முதல்வர் முக.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் நலத்திட்ட பணிகள் குறித்து பார்வையிட்டார். மேலும் புதிய நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அப்பொழுது முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் “கொளத்தூர் தகுதி என்னுடைய சொந்த தொகுதியாகும். இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் என்னை அவர்களுடைய வீட்டுப் பிள்ளையாக பார்க்கிறார்கள். நான் எப்பொழுது வேண்டுமானாலும் என்னுடைய சொந்த தொகுதிக்கு வருவேன்.

தமிழக அரசு வடகிழக்கு பருவமழையை சந்திக்க தயாராக உள்ளது. பருவமழையை சந்திக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. கடந்த ஆட்சியில் முதலீடுகள் எப்படி ஈர்க்கப்பட்டது என்பது பற்றி அனைவருக்கும் தெரியும்” என்று கூறினார்.

இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சராக பதவியேற்பாரா இல்லையா அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் கிடைக்கின்றது அது உண்மையா என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விகளுக்கு முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் ஏமாற்றம் இருக்காது. ஆனால் மாற்றம் இருக்கும்” என்று கூறினார்.

இதை வைத்து பார்க்கும் பொழுது அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. அதே போல அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்பதில் ஏமாற்றம் இருக்காது என்பதும் தெரிகின்றது.