பற்களில் படிந்துள்ள கடினமான கறைகளை இரண்டே நிமிடத்தில் போக்கும் ஹோம் ரெமிடி!!

0
133
To remove hard stains from teeth
To remove hard stains from teeth

பல் ஆரோக்கியம் என்பது அனைவரும் முக்கியமான ஒன்று.ஆனால் உங்களில் சிலருக்கு பற்களில் கற்கள் படிந்து பார்க்க அசிங்கமாக இருக்கும்.இந்த கறைகளால் வாய் துர்நற்றம் ஏற்படக் கூடும்.எனவே வீட்டு வைத்தியம் மூலம் இதற்கு தீர்வு காண்பது நல்லது.

*பேக்கிங் சோடா 1/2 ஸ்பூன்
*எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
*எலுமிச்சை தோல் ஒன்று

ஒரு பவுலில் பேக்கிங் சோடா அரை ஸ்பூன் சேர்க்கவும்.பிறகு ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறை அதில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இதை வைத்து பற்களை துலக்கவும்.பிறகு ஒரு எலுமிச்சை தோலை எடுத்து பற்களை தேய்க்கவும்.இவ்வாறு செய்வதால் நீண்ட நாட்களாக படிந்துள்ள கறைகள் அனைத்தும் நீங்கி பல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

*கொய்யா இலை பத்து
*கல் உப்பு ஒரு ஸ்பூன்

பச்சை நிறத்தில் இருக்கின்ற கொய்யா இலை 10 என்கிற அளவில் எடுத்து வெயிலில் காயவைக்கவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.

அதன் பிறகு ஒரு ஸ்பூன் கல் உப்பை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.இதை கொய்யா இலை பொடியில் மிக்ஸ் செய்து வைக்கவும்.

அடுத்து ஒரு கிண்ணத்தில் அரைத்த கொய்யா இலை பொடி ஒரு ஸ்பூன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்டாக்கி கொள்ளவும்.இதை வைத்து பற்களை துலக்கி வந்தால் கறைகள் நீங்கி பற்கள் பளிச்சிடும்.

*ஆரஞ்சு பழ தோல் ஒரு கப்
*வேப்பிலை ஒரு கைப்பிடி

ஒரு கைப்பிடி வேப்பிலையை நன்கு உலர்த்தி பொடியாக்கி கொள்ளவும்.அதேபோல் ஒரு கப் ஆரஞ்சு தோலை வெயிலில் காய வைத்து பொடியாக்கி கொள்ளவும்.இந்த இரண்டு பொடியையும் ஒன்றாக மிக்ஸ் செய்து பாட்டிலில் சேமித்துக் கொள்ளவும்.

இதை கொண்டு பற்களை துலக்கி வந்தால் நீண்ட நாள் கடினமான கறைகள் அனைத்தும் சில வாரங்களில் நீங்கிடும்.