உதயநிதி எப்பொழுது துணை முதல்வர் பதவி வகிப்பார் என்ற தேதி மட்டும் தான் குறிக்கவில்லை மேற்கொண்ட அனைத்தும் உறுதியாக விட்டது. அந்த வகையில் கட்சி நிர்வாகிகள் தற்போதையிலிருந்து துணை முதல்வர் உதயநிதி என முழக்கமிட ஆரம்பித்து விட்டனர்.
இதனை நாடாளுமன்ற பதவியேற்பு விழாவின் போதே உதயநிதி பெயருக்கு முழக்கமிட்டு அடித்தளமிட்டனர் என்றே சொல்லலாம். இருப்பினும் மூத்த நிர்வாகிகள் குறிப்பாக அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோருக்கு இதில் விருப்பமில்லை. கட்சியில் அயராது உழைத்து அமைச்சர் பதவியை மட்டும் அனுபவிப்பதா என்ற கேள்விகளை முன் வைத்துள்ளனர்.
இவர் மேடைப்பேச்சுகளில் பேசும் கருத்து மூலமே இது அனைத்தையும் வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் உதயநிதி மற்றும் துரைமுருகனுக்கு இடையே உட்கட்சி மோதல் இருந்தது என்று கூறலாம். தற்பொழுது அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், உதயநிதி துணை முதல்வர் பதவி வகிப்பது மிகவும் சரிதான் அதற்கு அனைத்து பொருத்தமும் உள்ளது.
தனது இளம் பருவத்திலேயே கட்சிக்காக அயராத உழைத்தவர், அதுமட்டுமின்றி திராவிட கொள்கையில் கூறியவர் எனவே அமைச்சரவை மாற்றம் குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார்.