மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களால் நாட்டு மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் பல நலத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் சேமிப்பு திட்டங்கள்,மானியத்துடன் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.இதனால் ஆண்களுக்கு நிகராக பொருளரத்தில் பெண்களும் முன்னேற்றத்தை கண்டு வருகின்றனர்.அந்தவகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களுக்காக பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டம் கடந்த 2021-2022 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா பெண்கள் சுயத் தொழில் தொடங்க ரூ.1,00,000 கடனுதவி வழங்கும் திட்டமாகும்.இத்திட்டத்தின் மூலம் கடன் பெறுவோருக்கு ரூ.50,000 மானியம் வழங்கப்படும்.அதாவது 50% தொகையான ரூ.50,000 மட்டும் திருப்பி செலுத்தினால் போதுமானது.
இதில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவை சேர்ந்த பெண்களுக்கு துவாரக்கா திட்டத்தின் மூலம் ரூ.3,00,000 வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது.பெண்கள் சுயமாக வேலைவாய்ப்பை உருவாக்கி கொள்வதற்காக இந்த மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க வருமான வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.இருப்பினும் ஆண்டு வருமானம் ரூ.2,50,000 கீழ் இருக்கும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.விருப்பமுள்ள பெண்கள் பொது வசதி மையம்,பொது சேவை மையத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.