மீண்டும் அமைச்சராகும் செந்தில் பாலாஜி.. முதல்வர் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!!

0
294
Senthil Balaji who will become a minister again.. The Chief Minister will take an action decision!!
Senthil Balaji who will become a minister again.. The Chief Minister will take an action decision!!

 

DMK: நிபந்தனைகளுடன் கூடிய ஜாமினில் வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சரவையில் பதவி வழங்கப்படுவது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 471 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். இன்று தான் அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. பலமுறை ஜாமின் மனு அளித்தும் அதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் நிராகரித்து வந்தது. பல முன்னணி வழக்குகளின் வாதங்களை முன்வைத்து தற்பொழுது இவர் வெளிவர நேரிட்டது. இவ்வாறு இருக்கும் சூழலில் சமீபத்தில், அமைச்சரவையில் மாற்றம் வரும் என முதல்வர் உறுதியாக தெரிவித்திருந்தார்.

இதனிடையே உதயநிதியின் துணை முதல்வர் பதவியும் எப்பொழுது என்று எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. செந்தில் பாலாஜி சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் இருவரையும் ஒரே நேரத்தில் அரியணையில் ஏற்ற ஸ்டாலின் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதற்கேற்றார் போலவே உதயநிதியின் பதவி வகிப்பும் தள்ளிப்போனது.

மேலும் சமீபத்தில் அமைச்சரவையில் கட்டாயம் மாற்றம் உண்டாகும் என ஸ்டாலின் கூறியதும் என அனைத்தும் ஒருசேரப் பொருந்தி உள்ளது. வரும் வாரம் அல்லது இந்த மாதம் இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு மீண்டும் செந்தில் பாலாஜிக்கு அவரது அமைச்சர் பதவி மற்றும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleDMK: கொண்டாட்டத்தில் ஸ்டாலின்.. நிபந்தனை ஜாமினில் சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில்பாலாஜி!!
Next articleபுதிதாக ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்களா நீங்கள்? அரசு வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு!