புதிதாக ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்களா நீங்கள்? அரசு வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு! 

0
196
Are you a new ration card applicant? Important announcement issued by the government!
Are you a new ration card applicant? Important announcement issued by the government!

 

 

புதிதாக ரேஷன் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் புதிதாக ரேஷன் கார்டுகள் வழக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் முன்பு ரேஷன் அட்டைகள் நோட்டு வடிவில் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது ஸ்மார்ட் கார்ட் வடிவில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் மக்களுக்கு அடிப்படை அடையாள அட்டைகளில் ஒன்றாக இருக்கின்றது.

அடிப்படை அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும் ரேஷன் ஸ்மார்ட் அட்டைகளானது தமிழக அரசு வழங்கும் பல சலுகைகளை பெறவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அது மட்டுமில்லாமல் இருப்பிட சான்றுக்கும் ரேஷன் ஸ்மார்ட் கார்டு முக்கியமான ஆவணமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் தற்பொழுது 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் தான் மானிய விலையில் ரேஷன் கடைகளின் மூலமாக பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதையடுத்து தமிழக அரசால் தற்பொழுது மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் 1000 ரூபாய் பெறுவதற்கு ரேஷன் ஸ்மார்ட் கார்டு கட்டாயம். இதையடுத்து ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள் தனித்தனியாக புதிதாக ரேஷன் அட்டைகள் கேட்டு விண்ணப்பிக்க தொடங்கினர். திடீரென்று புதிதாக ரேஷன் கார்டுகள் பெறுவதற்கு விண்ணப்பங்கள் அதிகரிக்கத் தொடங்கியதால் புதிதாக ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கவும் புதிதாக ரேஷன் கார்டுகள் வழங்கும் பணியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து புயல் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புதிதாக ரேஷன் அட்டைகள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் புதிதாக ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 45 ஆயிரத்து 509 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது.

இதையடுத்து புதிதாக ரேஷன் அட்டைகள் கேட்டு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் புது ரேஷன் அட்டைகள் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. இதையடுத்து புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தேர்தல் பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து தேர்தல் பணிகளும் முடிந்த பின்னர் மீண்டும் புதிதாக ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணபித்தவர்களுக்கு மீண்டும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டது. அதன்படி 2 லட்சத்து 89 ஆயிரத்து 591 விண்ணப்பங்களில் 1,22,000 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ஒப்புதல் அளிக்கப்பட்ட 122000 விண்ணப்பங்களில் 80050 விண்ணப்பங்களுக்கு புது ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டது.

புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்தவர்களில் கிட்டதட்ட 1 லட்சத்திற்கும் மேலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதில் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு சரிபார்க்கும் பணியும் கள ஆய்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் புதிதாக ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணபித்தவர்களுக்கு விரைவில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் அதிகாரிகள் கூறியுள்ள தகவலையடுத்து புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டவுடன் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Previous articleமீண்டும் அமைச்சராகும் செந்தில் பாலாஜி.. முதல்வர் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!!
Next articleபுரட்டாசி மாத சனிக்கிழமை விரதம் கடைபிடிக்கும் முறை!! விரதத்திற்கு பிறகு செய்ய வேண்டியவை!!