இந்து மக்கள் புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.தமிழ் மாதத்தில் ஆடிக்கு அடுத்த புனிதமான மாதமாக திகழும் புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதமாகும்.
பெருமாளை வழிபடுபவர்கள் இம்மாதம் முழுவதும் அசைவம் சாப்பிட மாட்டார்கள்.புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமை நாளில் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதை பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
மேலும் சனிக்கிழமை அன்று விரதம் இருந்து பெருமாளுக்கு பூஜை செய்வதால் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி புண்ணியம் வந்து சேரும் என்பது ஐதீகம்.முழுமையான பக்தியுடன் பெருமாளை வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
பெருமாளை வழிபாடும் முறை
சனிக்கிழமை நாளில் அதிகாலையில் எழுந்து வீடு வாசலை பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும்.பிறகு வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலமிடவும்.பிறகு தலைக்கு குளித்துவிட்டு பூஜை அறையை துடைத்து சுத்தம் செய்யவும்.
பெருமாள் உருவ படத்திற்கு சந்தனம் மற்றும் குங்குமத்தில் போட்டு வைத்து மாலை சூட்டவும்.அதன் பிறகு ஒரு செம்பில் தேங்காய் தண்ணீர் மற்றும் சிறிது துளசி இலை போட்டு பெருமாள் உருவப்படத்திற்கு முன்’வைக்கவும்.
அதன் பிறகு ஒரு வாழை இலையில் பெருமாளுக்கு உகந்த நெய்வேத்தியங்களை படைக்க வேண்டும்.சர்க்கரை பொங்கல்,சுண்டல்,லட்டு,புளி சாதம்,தயிர் சாதம்,வடை போனவற்றை படைக்கலாம்.பிறகு தீபம் ஏற்றி கற்பூர ஆராதணை காட்டி பெருமாளுக்கு பூஜை செய்து வழிபட வேண்டும்.பெருமாளை வழிபாடு முடியும் வரை உணவு உட்கொள்ளக் கூடாது.நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளலாம்.
வீட்டில் பூஜை வழிபாடு முடிந்த பிறகு கோயிலுக்கு சென்று பெருமாளை வழிபட்டு அங்கிருப்பவர்களுக்கு நெய்வேத்தியத்தை அன்னதானமாக வழங்க வேண்டும்.