2026ல் கட்டாயம் வெற்றி கிடைக்கும்.. நடிகர் விஜய் இடம் பெறுவார் – விசிக திருமாவளவன்! 

0
135
In 2026 there will definitely be success.. Actor Vijay will take place - Visika Thirumavalavan!

 

தமிழகத்தில் 2026ல் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் நடிகர் விஜய் அவர்கள் இரண்டாவது இடத்தை பிடிப்பார் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் தற்பொழுது பேட்டி அளித்துள்ளார்.

தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து ஆளும் கட்சியான திமுக, எதிர்கட்சியான அதிமுக, தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக, எப்படியாவது தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் நாம் தமிழர் கட்சி என்று அனைத்து கட்சிகளும் 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றது.

இதற்கு மத்தியில் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர். விஜய். அவர்களும் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் அரசியலில் இறங்கியுள்ளார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கின்றார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் அதிமுக வாக்குகள் சிதறும் என்றும் நடிகர் விஜய் இரண்டாவது இடம் பிடிப்பார் என்றும் பாஜக கட்சி தமிழகத்தில் ஒரு காலத்திலும் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் அவர். கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. அக்டோபர் மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் மது ஒழிப்பு மாநாடு நடத்துவதற்கு திட்டமிட்டு அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் ஆதவ் அர்ஜூன் அவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் திருமாவளவன் அவர்கள் “தமிழகத்தில் 2026ம் ஆண்டுதான் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றது. ஆனால் தேர்தலுக்கு இவ்வளவு நாட்கள் இருக்க தற்பொழுதே அதிகாரப் பகிர்வு, கூட்டணி பற்றி பேசுவது நல்லது இல்லை என்று நான் கூறியதை ஆதவ் அர்ஜூன் ஏற்றுக் கொண்டார்.

ஆதவ் அர்ஜூன் அவர்கள் நாங்கள் பேசியதை எங்கள் சார்பாக பேசுகிறார். அதில் எங்களுக்கு மகிழ்ச்சி ஆனால் எதை எப்பொழுது பேச வேண்டும் என்பது தெரிந்து பேச வேண்டும். சுருக்கமாக சொன்னால் இடம், பொருள், ஏவல் தெரிந்து பேச வேண்டும். ஆதவ் அர்ஜூன் இவ்வாறு பேசியதற்கு ஆராசா அவர்கள் நடவடிக்கை எடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறியதை நாங்கள் நிபந்தனையாக கூறவில்லை. நாங்கள் அதை பரிந்துரையாகத் தான் கூறினேன்.

நாங்கள் 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கட்சியுடன் தான் கூட்டணியில் இருப்போம். இதை நான். இங்கு தெளிவாக கூறிக் கொள்கின்றேன். திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகவுள்ளதாக பேசுகிறார்கள். அதாவது பதவி, சீட்டு ஆகியவற்றை காரணமாக வைத்து திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகவுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அதை நாங்கள் இரண்டாவது இடத்தில் வைத்துள்ளோம்.

2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பல அந்நிய சக்திகள் திமுக கட்சியின் கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றது. எனவே அந்த அந்நிய சக்திகளின் திட்டங்களை தகர்த்து திமுக கூட்டணியின் பலத்தை அதிகரிப்பதையே முக்கிய போராட்டமாக நான் பார்க்கிறேன்.

2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனியாக நிற்கப் போகின்றது. அதே போல நாம் தமிழர். கட்சியும் தனியாக போட்டியிடப் போவதாக முன்பே அறிவித்துவிட்டது. அதே போல மாநிலக் கட்சியான பாஜக தனித்து போட்டியடப் போகின்றது.

நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது தான் கட்சி தொடங்கியுள்ளார். முதல் முறையாக அவர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை. ஆனால் பாமக கட்சி என்ன செய்யப் போகின்றது என்பதை பற்றி தெரியவில்லை.

இவ்வாறு இருக்க முன்பு கூறியதைப் போலவே திமுக கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பல வேலைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. திமுக கட்சியை பலவீனப்படுத்திவிட்டால் அதிமுக கட்சியை எளாமையாக கையாள முடியும் என்ற நினைப்பில் பாஜக இருக்கின்றது.

ஆனால் அதிமுக கட்சியின் வாக்கு வங்கி இன்னும் அப்படியேதான் இருக்கின்றது. பெரிதாக ஒன்றும் சிதறவில்லை. நடிகர் விஜய் அவர்கள் தேர்தலில் நிற்கும்பொழுது வேண்டுமானால் அதிமுக கட்சியின் இளம் தலைமுறையினரின் வாக்கு மாறுவதற்கு வாய்ப்புள்ளது.

திமுக கட்சி கட்டமைப்பு ரீதியில் மிகுந்த பலத்துடன் இருக்கின்றது. அதே போல கூட்டணி ரீதியில் பார்க்கும் பொழுதும் அதிக பலத்துடன் காணப்படுகின்றது. திமுக கட்சியின் இந்த பலம் பாஜக கட்சிக்கு நெருக்கடியாக இருக்கின்றது.

திமுக கட்சி 2026ல் வெற்றி பெற்றால் பாஜக கட்சியால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாமல் போய்விடும். அதே போலத்தான் நடிகர். விஜய் அவர்கள் தொடங்கியுள்ள கட்சி 2026ல் நடைபெறும் தேர்தலில் இரண்டாவது இடம் பிடிக்கும். அவ்வாறு நடிகர் விஜய் அவர்களின் கட்சி இரண்டாவது இடம் பிடிப்பதும் பாஜக கட்சிக்கு தமிழகத்தில் நல்லது அல்ல. எனவே பாஜக கட்சி ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை” என்று கூறியுள்ளார்.