TN Alert: தமிழக அரசானது உடனக்குடன் வானிலை அறிக்கையை தெரிந்து கொள்ளும் வகையில் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.
தமிழக அரசானது ஒவ்வொரு துறைக்கு ஏற்ப பல்வேறு தொழில்நுட்ப அப்டேட்களை செய்து வருகிறது. தற்பொழுது வரை தமிழ்நாடு வானிலை அறிக்கையை ஆய்வாளர் பிரதீப் ஜான் கொடுத்து வருகிறார். அந்த வரிசையில் தற்பொழுது வானிலை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விவரங்களை அறிய தமிழ்நாடு அலார்ட் என்ற செயலியை அறிமுகப்படுத்த உள்ளது.
இதன் அறிவிப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்த செயலி மூலம் மக்கள் தங்களது மொபைல் மூலம் இருக்கும் இடத்திலேயே, எந்தெந்த இடங்களில் மழை பொழிவு ஏற்படும் ஏரியின் நீர் அளவு என்ன மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த செயலி எப்பொழுதிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று எதுவும் கூறப்படவில்லை.