தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு தமிழக அரசு ஆவின் நிறுவனம் மூலமாக ஒரு வாய்ப்பை வழங்கவுள்ளது. அதாவது ஆவின் நிறுவனம் தற்பொழுது கிளைகளை தொடங்க பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலம் தொழில்முனைவோர் ஆக விரும்பும் நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
அதாவது ஆவின் நிறுவனம் தங்களின் பொருட்களை விற்பனை செய்வதற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில்லறை விற்பனையாளர்களை நியமிக்கவுள்ளது. அந்த வகையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஆவின் நிறுவனத்தின் சில்லறை விற்பனையாளராக மாறுவதற்கு தங்களுடைய மார்கெட்டிங் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் என்று ஆவின் நிறுவனம் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து ஆவின் நிறுவனத்தின் சில்லரை விற்பனையாளர்கள் ஆக விரும்பும் நபர்கள் கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி… பொது மேலாளர்(மார்கெட்டிங்), TCMPF லிமிடெட், 3A Chamiers Road, நந்தனம், சென்னை, 600035. தொலைபேசி எண்கள்… 9790773955, 9444728505, 9444915453.
அதன்படி இந்த திட்டத்தில் 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு முதலீடு செய்தால் மாதம் 20000 வரை சம்பாதிக்க முடியும். அதாவது மாதம் 20000 ரூபாய் லாபமாக மாதாந்திர ஸ்மார்ட் ரிட்டர்ன்ஸ் பெற முடியும்.
அது மட்டுமில்லாமல் நியாவிலைக் கடைகளில் ஆவின் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் நியாவிலைக் கடைகளில் ஆவின் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. சிறிய வகை பாக்கெட்டுகளில் ஆவின் நிறுவனத்தின் நெய் முதலிய பொருட்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் நியாவிலைக் கடைகளில் ஆவின் நிறுவனத்தின் எந்தெந்த பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்பது தொடர்பான லிஸ்ட் விரைவில் தயாராகிவிடும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. நியாவிலைக் கடைகளின். மூலமாக தற்பொழுது அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகிய பொருட்கள் மானிய விலையில் மக்களுக்காக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தமிழக ரேஷன் கடைகளில் கடந்த சில மாதங்களாக இருந்த தட்டுப்பாடு தற்பொழுது சரி செய்யப்பட்டுள்ளது. அனைத்து கடைகளிலும் ரேஷன் பொருட்கள் ஸ்டாக் நிரப்பப்பட்டுள்ளது. மேலும் அரிசி திருட்டு போவது, கள்ளச் சந்தையில் ரேஷன் பொருட்களை விற்பனை செய்வது ஆகிய தவறான செயல்களை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.