How To: மொபைலில் INTERNET வேகத்தை அதிகரிப்பது எப்படி!! உடனே ட்ரை பண்ணுங்க!!

0
129
These tips will surely help you to increase INTERNET speed on mobile!! Try it immediately!!
These tips will surely help you to increase INTERNET speed on mobile!! Try it immediately!!

இன்றைய காலகட்டத்தில் மின்னணு சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.குறிப்பாக இந்தியா டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி கண்டு வருகிறது.

ஆன்லைன் வர்த்தகம்,ஆன்லைன் பேமண்ட் என்று அனைத்து செயல்பாடுகளுக்கும் இணையவசதி அவசியமான ஒன்றாகும்.இன்று பல டெலிகாம் நிறுவனங்கள் இணையதள வசதியை வழங்கி வருகிறது.இருப்பினும் கிராமப்புறங்களில்,மலை கிராமங்களில் இணைய வேகம் போதிய அளவு இருப்பதில்லை.இதனால் பலரும் உரிய இணைய வசதி இல்ல்லாமல் அவதியடைந்து வருகின்றனர்.

மொபைலில் இணைய வசதியை அதிகரிக்கும் டிப்ஸ்:

1.உங்கள் மொபைலில் உள்ள Google chrome browser-ஐ ஓபன் செய்து மேல் வலது மூலையில் உள்ள ஐகானை கிளிக் செய்யவும்.பிறகு Settings என்பதை கிளிக் செய்து Site Settings என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

அதன் பிறகு கீழே ஸ்க்ரோல் செய்தால் Storage (or) Data stored என்பது ஷோ ஆகும்.அதை கிளிக் செய்யவும்.பிறகு Clear all data என்பதை நீங்கள் கிளிக் செய்யவும்.இவ்வாறு செய்வதால் உங்கள் இன்டர்நெட் வேகம் அதிகரிக்கத் தொடங்கும்.

2.உங்கள் மொபைலில் உள்ள Google chrome browser-ஐ ஓபன் செய்து மேல் வலது மூலையில் உள்ள ஐகானை கிளிக் செய்யவும்.பிறகு Settings என்பதை கிளிக் செய்யவும்.பிறகு அதில் Sync On என்ற ஆப்ஷனை கிளிக் செய்து OFF செய்யவும்.இவ்வாறு செய்தால் உங்கள் Data save செய்யப்பட்டு நெட் வேகம் அதிகரிக்கும்.

3.உங்கள் மொபைலில் Settings-ஐ ஓபன் செய்து Mobile Network என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பிறகு அதில் உள்ள Data saver என்பதை கிளிக் செய்து அதை ஆப் செய்யவும்.இவ்வாறு செய்தால் உங்கள் மொபைலில் இன்டர்நெட் வேகம் அதிகரிக்கும்.