உங்கள் கூந்தல் கருகருன்னு இருக்க ஆசையா? இந்த ஆயுர்வேத மூலிகை எண்ணெயை தலைக்கு யூஸ் பண்ணுங்க!!

0
136
Do you want your hair to be gray? Use this Ayurvedic herbal oil on your scalp!!
Do you want your hair to be gray? Use this Ayurvedic herbal oil on your scalp!!

தலை முடி அடர் கருமையாக இருக்க வேண்டுமென்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது.இதற்கு நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெயை தயாரித்து பயன்படுத்தி வந்தால் தலைமுடி அனைத்தும் கருமையாக மாறும்.

தேவையான பொருட்கள்:

1)தேங்காய் எண்ணெய்
2)அவுரி இலை
3)கரிசலாங்கண்ணி
4)மருதாணி இலை
5)கறிவேப்பிலை
6)கருஞ்சீரகம்

செய்முறை:

அகலமான இரும்பு கடாய் ஒன்றை எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி அவுரி இலை பொடி,இரண்டு தேக்கரண்டி மருதாணி பொடி,இரண்டு தேக்கரண்டி கறிவேப்பிலை பொடி,ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகப் பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி வெள்ளை கரிசலாங்கண்ணி பொடி சேர்த்து கலந்து விடவும்.

பிறகு அதில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி கரண்டி கொண்டு கலந்து விடவும்.இதை அடுப்பில் வைத்து குறைவான தீயில் எண்ணெய் காய்ச்சவும்.எண்ணெய் அடர் கருமையானதும் அடுப்பை அணைத்து விடவும்.பிறகு இந்த எண்ணெயை ஒரு நாள் முழுவதும் ஆறவிட்டு பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளவும்.

இந்த எண்ணெயை தினமும் தலைக்கு பயன்படுத்தி வந்தால் செம்பட்டை முடி,நரைமுடி அனைத்தும் அடர் கருமையாக மாறும்.

அதேபோல் தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி இதழ்,செம்பருத்தி இலை,மலை நெல்லிக்காய்,கற்றாழை துண்டுகளை போட்டு கொதிக்க வைத்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி கருகருன்னு வளரும்.

மற்றுமொரு தீர்வு

தேவையான பொருட்கள்:

1)ஆளிவிதை
2)மிளகு
3)சின்ன வெங்காயம்
4)துளசி
5)கறிவேப்பிலை
6)கற்றாழை
7)தேங்காய் எண்ணெய்

செய்முறை:

அடுப்பில் இரும்பு கடாய் வைத்து ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி ஆளிவிதை,1/4 தேக்கரண்டி மிளகு,இடித்த சின்ன வெங்காயம் இரண்டு தேக்கரண்டி,ஒரு தேக்கரண்டி உலர்ந்த துளசி,இரண்டு தேக்கரண்டி கறிவேப்பிலை பொடி,இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.எண்ணெய் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து விட்டு நன்கு ஆறவிடவும்.இதை சுத்தமான பாட்டிலில் வடிகட்டி சேமிக்கவும்.

தினமும் இரவு இந்த எண்ணெயை தலைக்கு அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் கொடுக்கவும்.இப்படி செய்தால் சில வாரங்களில் தலைமுடி கருமையாகிவிடும்.

Previous articleLUNG CANCER: உஷார்.. நுரையீரல் புற்றுநோய் வந்தால் அறிகுறிகள் இப்படி தான் இருக்கும்!!
Next articleஉடலில் இரும்புச்சத்து குறைந்துவிட்டதா? கவலையை விடுங்கள் இந்த ஒரு தானியத்தை மட்டும் சாப்பிட்டு வாருங்கள்!!