உங்களுக்கு HOME LOAN ரிஜெக்ட் ஆகிடுச்சா? டோன்ட் பீல்.. இதை செய்தால் வீட்டுக்கடன் கிடைத்துவிடும்!!

0
173

 

உங்கள் எல்லோருக்கும் இருக்கக் கூடிய பெரிய கனவு சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பது தான்.இதற்காக சிலர் பணத்தை சேமித்து வைத்திருப்பீர்கள்.சிலர் வங்கியில் லோன் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பீர்கள்.ஆனால் ஹோம் லோனிற்கு விண்ணப்பிக்கும் எல்லோருக்கும் வங்கியில் லோன் கிடைப்பதில்லை.

 

சில காரணங்களால் ஹோம் லோன் நிராகரிக்கப்பட்டுவிடுகிறது.நிலையான வருமானம்,நல்ல வேலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே லோன் கிடைக்கிறது.இன்றைய காலகட்டத்தில் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் லோன் போடாமல் வீடு கட்ட முடியாது.சாமானியர்கள் இதுபோன்ற லோன்களை நம்பியே இருப்பதால் அவை நிராகரிக்கப்படும் போது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர்.

 

சிபில் ஸ்கொர் நிர்ணயித்த அளவை விட குறைவாக இருத்தல்,ஆவணங்களில் பிரச்சனை,குறைவான வருமானம் மற்றும் நிலையில்லா வருமானம் போன்ற காரணங்களால் ஹோம் லோன் நிராகரிக்கப்படுகிறது.

 

ஆனால் இவ்வாறு நிராகரிக்கப்பட்டால் மீண்டும் லோன் பெற விண்ணப்பிக்க முடியாது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் சில வழிகளை பின்பற்றினால் மீண்டும் வீட்டு கடன் பெற விண்ணப்பிக்க முடியும்.

 

முதலில் உங்கள் சிபில் ஸ்கோரை சரி பார்க்க வேண்டும்.உங்கள் சிபில் ஸ்கோர் 700க்கும் குறைவாக இருந்தால் அதை உயர்த்த வேண்டும்.மோசமான சிபில் ஸ்கோர் லோன் ரிஜெக்சனுக்கு வழிவகுத்துவிடும்.ஏற்கனவே லோன் வாங்கி இருந்தால் அதை முறையாக அடைக்க வேண்டும்.EMI-இல் பொருள் வாங்கி இருந்தால் அதற்கான தவணை தொகையை முறையாக செலுத்த வேண்டும்.இதன் மூலம் சிபில் ஸ்கோரை அதிகப்படுத்தலாம்.

 

உங்களுக்கு லோன் நிராகரிக்கப்பட்டால் NBFCகளை அணுகி கடன் பெறலாம்.RBI அங்கீகரித்த நிறுவனங்களில் மட்டும் கடன் பெற வேண்டும்.இணை விண்ணப்பதாரர் உதவியுடன் கடன் பெறலாம்.