தற்பொழுது சிறந்த பொழுதுபோக்கு சமூக வலைத்தளமாக யூட்யூப் திகழ்கிறது.யூட்யூபில் பாட்டு,சமையல்,குழந்தைகள் காணொளி,கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த காணொளி,திரைப்படங்கள்,உலக நிகழ்வுகள் அனைத்தும் பார்க்க முடிகிறது.
இதனால் மக்கள் வாழ்க்கையில் இதுபோன்ற சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கை வகிக்கிறது.மற்ற செயலிகளை காட்டிலும் யூட்யூப் செயலிக்கான வரவேற்பு சற்று அதிகமாகத் தான் இருக்கிறது.காரணம் யூட்யூபில் பயனர்கள் தங்களுக்கு சொந்தமான சேனலை தொடங்கி வீடியோக்களை பதிவிட்டு சம்பாதிக்கும் ஒரு பிளாட்பார்ம் ஆக திகழ்கிறது.இதனால் தற்பொழுது இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் யூட்யூப் சேனல் தொடங்கி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சிலர் தங்களது வேலைகளை விட்டுவிட்டு முழுநேர யூட்யூபராகவே மாறிவிட்டனர்.அதிகமான சப்ஸ்கிரைப்பர்,வீவ்ஸ் போன்றவற்றை பெற வேண்டும் என்பதற்காக கவரும் வகையான காணொளிகளை பதிவிட்டு வருகின்றனர்.இதனால் வேலையில்லா திண்டாட்டம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு யூடியூப் சேனல் தொடங்கி வருமானம் ஈட்டுவது குறித்த பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்த உள்ளது.இந்த வகுப்பில் பயிற்சி பெற விரும்புபவர்கள் 18 வயதை பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர முடியும்.
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் வருகின்ற அக்டோபர் 16 முதல் 18 ஆம் தேதி வரை யூடியூப் சேனல் உருவாக்குவது குறித்த பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது.இந்த வகுப்பு காலை 10 மணிக்கு தொடங்கி மலை 5:45 வரை நடக்க இருக்கிறது.