அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை மூலம் அதிரடியான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே சந்தோசம் தான். அதிலும் குறிப்பாக தொடர் விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம். தமிழ்நாட்டில் தற்போது மே மாதத்திற்கு பிறகு காலாண்டு விடுமுறை 9 நாட்கள் விடப்பட்டுள்ளது. .4 நாட்கள் மட்டுமே விடுமுறை என கூறப்பட்ட நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை 9 நாட்களாக நீட்டிப்பு செய்யப்பட்டது.
மாணவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் பாடங்கள் பாதிக்கப்படுவதால் சிறப்பு வகுப்புகளும் தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாவதால் சிபிஎஸ்சி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு முக்கியமான உத்தரவு . பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே 220 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என பள்ளிகளுக்கான நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பின் காரணமாக பள்ளி வேலை நாட்கள் 210 நாட்களாக குறைக்கப்பட்டது. இந்த விடுமுறை மட்டும் போதாது இன்னும் கூடுதல் விடுமுறை என மாணவர்கள் தவித்தாலும் அவ்வப்போது அவர்களுக்கு சிறிது மகிழ்ச்சியை தரும் வகையாக உள்ளூர் விடுமுறைகளும் விடப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறையை தமிழ்நாடு அரசு தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதனால் தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி போட்டுக் கண்டு அரசு பள்ளி மாணவர்களும் பாடங்களை கற்று வருகின்றனர். மாநில அளவில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
அதேபோல தனியார் பள்ளிகளிலும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பலவகையில் முயற்சிகளை செய்து வருகிறது. எப்படி வாரத்தின் அனைத்து நாட்களிலும் பள்ளிகள் நடத்துவது, சிறப்பு வகுப்புகள் இரவு வகுப்புகள் ஆன்லைன் வகுப்புகள் என மாணவர்களை மனரீதியாக பாதிக்க வைக்கும் வகையில் நடத்தப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது.
அதிலும் குறிப்பாக விருதாச்சலம் கல்வி மாவட்டத்தில் உள்ள மெட்ரிக் சிபிஎஸ்சி பள்ளிகளில் காலை 7:30க்கு தொடங்கும் பள்ளியானது மாலை 7:30 வரை நடத்தப்படுவதாகவும், மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் சென்றது.
இதனால் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் மன உளைச்சலுக்கு ஆளாவதால் விருத்தாச்சலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரசு விடுமுறை அறிவித்த நாட்கள் தேர்வு மற்றும் விடுமுறை நாட்களில் பள்ளிகள் இயங்கவோ சிறப்பு வகுப்புகள் நடத்தவோ கூடாது என மெட்ரிக் சிபிஎஸ்சி பள்ளி தாளாளர்கள் மற்றும் முதல்வர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் காரணமாக தற்போது பள்ளிகள் மாலை 5:30 மணிக்கு முடிவடைவதால் பெற்றோர் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.