தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநில அரசு இரண்டு முறை ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரேஷன் அட்டை வைத்திருக்கும் அட்டைதாரர்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறைந்த விலையில் நியாய விலைக் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றன.
அரசின் மூலம் வழங்கப்படும் ரேஷன் அட்டை அட்டைதாரர்களுக்கு அரிசி பருப்பு, சர்க்கரை கோதுமை எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடையில் மாதம் ஒருமுறை இலவசமாகவும், குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு அந்த நிலையில் பொதுமக்கள் அதைப் பெற்று பயன் பெற்று வந்தனர்.
இந்த சூழ்நிலையில் இந்த மாதம் அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மத்திய மாநில அரசுகள் பொதுமக்களுக்காக ஏகப்பட்ட தீபாவளி பரிசினை வழங்குவதற்காக ஆலோசனை செய்து வருகின்றன.
அதில் ஜார்க்கண்ட் மாநில அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அந்த மாநில மக்களுக்கு அதிரடி ஜாக்பாட் பரிசு வழங்கியுள்ளது. அந்த மாநிலத்தில் பச்சை ரேஷன் அட்டை வைத்திருக்கும் பயனாளர்களுக்கு மாதம் இரண்டு முறை ரேஷன் வழங்கப்படும் என்றும் அது இந்த மாதம் முதலே செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இதன் மூலம் பச்சை ரேஷன் அட்டை வைத்திருக்கும் மக்கள் இந்த அறிவிப்பு மூலம் மாதம் இருமுறை பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த அதிரடியான அறிவிப்பு அம்மாநில மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.