வீட்டிலேயே பட்டுப் புடவைகளை துவைப்பது எப்படி? இந்த ஸ்டெப்ஸ் மட்டும் பாலோ பண்ணுங்க!!

Photo of author

By Rupa

தென் இந்தியாவில் பட்டுப் புடவைக்கு அதிக மவுசு இருக்கிறது.சுப நிகழ்ச்சிகளில் பட்டுப் புடவை அணிவதை தென் இந்திய பெண்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இன்று பல டிசைன்களில் புடவை விற்பனைக்கு வந்தாலும் பட்டுப் புடவை மீதான மோகம் பெண்களிடையே குறையவில்லை.

பட்டுப் புடவை கட்டினால் சாதாரண பெண்ணும் ரிச்சாக தெரிவார்.பட்டு புடவையில் பெண்கள் அதிக அழகாக தெரிவார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.ஆனால் எவ்வளவு விலை கொடுத்து வாங்கிய பட்டுப் புடவை வாங்கினாலும் அதை முறையாக மராமரிக்கவில்லை என்றால் நாளடைவில் உடுத்த முடியாமல் போய்விடும்.

பட்டுப் புடவையை உடுத்திய பின்னர் அதை முறையாக சலவை செய்த பின்னர் மடித்து வைக்க வேண்டும்.ஆனால் வெளியில் சலவை செய்ய அதிக பணம் செலவாகும் என்பதால் பலரும் பட்டுப் புடவையை சலவை செய்வதில்லை.ஒரு சிலர் பணத்தை மிச்சப்படுத்துவதாக எண்ணி பட்டுப் புடவையை முறையாக சலவை செய்யாமல் உடுத்துவார்கள்.இதனால் பட்டுப் புடவையின் ஆயுட்காலம் விரைவில் குறைந்துவிடுகிறது.

பட்டுப் புடவையை வாஷிங் மெஷினில் துவைப்பது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது.பட்டுத் துணிகளை ட்ரை க்ளீன் மட்டுமே செய்ய வேண்டும்.எனவே வாஷிங் மெஷினில் ட்ரை க்ளீன் என்று குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே பட்டுப் புடவையை போட வேண்டும்.

முதலில் வாஷிங் மெஷினில் குளிர்ந்த நீரில் ஒரு தேக்கரண்டி வினிகர் சேர்த்து பட்டுத் துணிகளை ஊற விட வேண்டும்.இவ்வாறு செய்வதால் பட்டுத் துணியில் இருந்து துர்நற்றம்,கறைகள் அனைத்தும் நீங்கும்.

அதன் பிறகு வாஷிங் மெஷினில் சுழல் குறைவாக இருக்கும்படி செட் செய்து துணியை சலவை செய்ய வேண்டும்.நீரின் வெப்பநிலை 30 டிகிரிக்கு மேல் இருந்தால் சுழற்சி முடிந்த உடனே பட்டுத் துணிகளை வெளியில் எடுத்துவிட வேண்டும்.

அதன் பிறகு நிழலான இடத்தில் பட்டு துணியை காய வைக்க வேண்டும்.வெயிலில் காய வைத்தால் பட்டின் நிறம் மாறிவிடும்.இப்படி தான் பட்டுப் புடவையை துவைக்க வேண்டும்.