தமிழக அரசுக்கு கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி Technician (Diploma) Apprentices,Graduate Apprentices மற்றும் Non-Engineering Graduate Apprentices பணிகளுக்கு என்று 499 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.இப்பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை வகை: தமிழக அரசு பணி
நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம்
பணி:
1)Technician (Diploma) Apprentices -140
2)Graduate Apprentices – 201
3)Non-Engineering Graduate Apprentices – 158
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 499
கல்வித் தகுதி:
Technician (Diploma) Apprentices
இப்பணிக்கு மொத்தம் 140 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் Diploma in Engineering / Technology in relevant Discipline உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.8,000 ஊதியம் வழங்கப்படும்.
Graduate Apprentices
இப்பணிக்கு மொத்தம் 201 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் Bachelor Degree in Engineering / Technology in relevant Discipline உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.9,000 ஊதியம் வழங்கப்படும்.
Non-Engineering Graduate Apprentices
இப்பணிக்கு மொத்தம் 158 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் Bachelor Degree in Arts / B .Com / BBA / BBM / BCA / Technology in relevant Discipline உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.9,000 ஊதியம் வழங்கப்படும்.
மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்களுக்கு குறைந்தபட்சம் 18 அதிகபட்சம் 29 வயது இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
மதிப்பெண் அடிப்படையில் தேர்வு முறை
விண்ணப்பிக்க இறுதி நாள்: 21.10.2024
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
இப்பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருப்பவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.