குழந்தைகளுக்கு நிலா சோறு ஊட்டுவதன் காரணம் மற்றும் நன்மைகள்?

0
771

அக்காலத்தில் பெண்கள் தனது குழந்தைகளுக்கு வெட்டவெளியில் நிலாவை காட்டி நிலாச் சோறு ஊட்டுவார்கள். அது குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டி அவர்களை சாப்பிட வைக்கிறார்கள் என்றுதான் நாம் பெரும்பாலும் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இதிலும் ஒரு அறிவியல் உள்ளது என்று எத்தனை பேருக்கு தெரியும்?

குழந்தை தாயின் கருவில் இருக்கும் போது தாயின் தொப்புள் கொடி வழியாகத்தான் குழந்தைக்கு உணவு செல்லும்.எனவேதான் குழந்தைகளுக்கு குடலின் விட்டம் அதிகமாக இருக்காது.குழந்தை பிறந்து தொப்புள்கொடி உடலில் இருந்து பிரிந்த பின்பு குடலின் விட்டம் பெரிதாக தொடங்குகிறது. இது முழுமை அடைய குறைந்தபட்சம் ஐந்து வருடம் ஆகிறது. இதனால் குழந்தைகளுக்கு குடல் பகுதி மிகச் சிறியதாகவே இருக்கும். நாம் உணவு அளிக்கும் போது அது உணவு குடலை அதாவது இரைப்பையை சென்றடைய தாமதமாகும்.

நிலாவை காட்டி சோறு ஊட்டும் போது குழந்தை மேல் நோக்கி பார்க்கும். அப்போது தொண்டை மற்றும் உணவு குழாய் விரிவடைகிறது. அப்போது உணவு இலகுவாக இரைப்பை நோக்கி இறங்குகிறது. மேலும் கீழ் நோக்கி இறங்கும் அலைவு இயக்கங்கள் மற்றும் செரிமான ஊக்கிகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கின்றன. இதன் மூலம் குழந்தைகளின் உணவுச், செரிமான மண்டலம் ஆரோக்கியம் பெறுகிறது.

குழந்தைகளுக்கு இவ்வளவு ஆரோக்கியத்தை தரும் நிலாச்சோறு இந்த காலத்தில் நாகரிக வளர்ச்சியால் காணாமலே போய்விட்டது.அக்காலத்தில் செய்த ஒவ்வொரு செயலுக்கும் அறிவியலுக்கும் நமது உடல்நலத்திற்கும் பெரிதும் தொடர்பு இருக்கிறது எனவே நம் பாரம்பரிய உணவு முறை ஆகட்டும் உணவு சாப்பிடும் பழக்கம் ஆகட்டும் அழிந்துவிடாமல் கடைப்பிடித்து ஆரோக்கியமாக வாழ்வோம்.

Previous articleநோய் வரும் முன்னே அறிகுறியை வைத்து பாதுகாத்து கொள்வது எப்படி?
Next articleஅடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு!!