கடந்த ஆண்டு வந்த மிக்ஜாம் புயலால் அதிக இடங்களில் மழை நீர் 5 நாட்களுக்கும் மேல் நீக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். மேலும், அதிக பொருட் சேதமும் ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டு கனமழை என குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டகளில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் கனமழை வரக்கூடிய மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவன பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும், பாதிப்புக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகா உணவு, தண்ணீர்,தங்கும் இடங்கள், பேரிடர் மீட்பு படையினர் என அனைத்தையும் தயார் நிலை வைத்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.