சென்னையில் (15,16,17) ஆகிய நாட்களில் மிக கனமழை காரணமாக ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக கார் உரிமையாளர்கள் போட்டி போட்டுகொண்டு முந்தியடித்து அவர்களுக்கு அருகில் உள்ள வேளச்சேரி மற்றும் பள்ளிக்கரணை ஆகிய பாலங்களின் மீது பார்கிங் செய்தனர்.காவல்துறை அந்த வழியில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறாக இருக்கும் காரணத்தினால் வாகனத்தை அங்கிருந்து எடுக்குமாறு எச்சரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து கார் உரிமையாளர்கள் கூறுகையில் சென்ற ஆண்டு இதே போன்று கன மழை காரணமாக இது போன்று முன்னெச்சரிக்கை சரியாக இல்லாத காரணத்தால் எங்கள் வாகனங்கள் பாதிப்பிற்க்குள்ளானது. அதற்கு நாங்கள் லட்சக்கணக்கில் செலவு செய்தோம் அதனால் இந்த முறை அது போன்று நடக்காமல் இருக்க இவ்வாறு பாலத்தின் மீது முன்னெச்செரிக்கையாக வாகனங்களை நிறுத்தியுள்ளோம் என கூறுகின்றனர்.
இதை தொடர்ந்து போக்குவரத்து காவல்துறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து வாகனங்களுக்கும் அபராதம் விதித்ததாக ஒரு செய்தி பரவலாக பரவி வந்தது.இதற்கு போக்குவரத்து காவல்துறை விளக்கமளித்துள்ளது. பாலத்தின் மீது நிறுத்தப்பட்டுள்ள எந்த விதமான அபராதமும் விதிக்கப்படவில்லை அப்படி ஒரு வதந்தி பரவி வருகிறது என்றும் , பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியே எங்களின் முக்கியமான முன்னுரிமை மேலும், மக்களுக்கு தேவையான ஆதரவை வழங்க கடமைப்பட்டுள்ளோம் என மாநகர போக்குவரத்து காவல்துறை விளக்கமளித்தது.