தமிழக வெற்றிக் கழக மாநாடு திட்டமிட்டபடி நடக்குமா??  தள்ளிப்போகுமா??

0
131
All these people should not come to the convention!! Vijay placed a street order!!
All these people should not come to the convention!! Vijay placed a street order!!

வருகிற 27-ம் தேதி விலுப்புரம் மாவட்டம் , விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் 85 ஏக்கர் பரப்பளவில்  4-ம் தேதி பந்தல் கால் நெடும் நிகழ்ச்சியோடு  மாநாடு பணிகள் தொடங்கியது.  த.வெ.க உறுப்பினர்கள்  அதற்கான  வேலையில்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

த.வெ.க  பொதுசெயலாளர் புஸ்சி ஆனந்த் மாநாட்டிற்க்காக  மாவட்டங்கள் வாரியாக சென்று தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை அழைப்பு விடுத்து வருகிறார். தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் இரு சக்கர வாகனங்களில் வரும்போது தலைகவசம் அணிந்து வரவேண்டும் என்றும் ஒரு இரு சக்கர வாகனத்திற்கு இருவர் மட்டுமே வர வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.
த.வெ.க  தலைவர் விஜய் இந்த மாநாட்டு பணிகளுக்காக 27 குழுக்கள் அமைத்துள்ளார். இந்த மாநாடு குறித்து ஏற்கனவே எவ்வாறு மாநாட்டினை நடத்த போகிறீர்கள் என்று காவல்துறை சார்பாக 30 கேள்விகள் கேட்கப்பட்டது. தற்போது மழை காரணமாக மேலும் 4 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது .

இவ்வாறு தொண்டர்களின் அழைப்பு ஒரு பக்கமும் , மாநாட்டிற்கான ஏற்பாடுகள் ஒரு பக்கமும் இருக்க மற்றொரு பக்கம் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இன்னும் தொடர்ந்து அதி கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் விழுப்புரத்திலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் மாநாடு வேலைப்பாடுகள் தாமதமாகியுள்ளது.  மாநாடு ஏற்பாடு செய்யப்பட்ட வி.சாலையில் கன மழை பெய்து சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதே போன்று மழை தொடர்ந்து பெய்தால் மாநாடு திட்டமிட்ட தேதியில் நடக்குமா அல்லது தள்ளிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Previous articleஇந்தியாவின் அரையிறுதியை எட்டா கனியாக்கிய நியூசிலாந்து! 8 கேட்ச்களை தவற விட்ட பாகிஸ்தான் !
Next articleடெயிலி தண்ணீரில் சிறிது கல் உப்பு கலந்து வாய் கொப்பளித்து பாருங்கள்!! நிச்சயம் இத்தனை பலன்களை பெறுவீர்கள்!!