IND vs NZ: இந்தியா நியூசிலாந்து போட்டி நடைபெறுமா??  சொதப்பிய ரோஹித்தின் பிளான் !

0
148
Will the India New Zealand match take place??
Will the India New Zealand match take place??

நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியாவில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் போட்டியானது இன்று(புதன் ) பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடங்க  உள்ளது.

இந்த நிலையில் தமிழகம் மற்றும் பெங்களூருவிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு டெஸ்ட் போட்டியானது 5 நாட்கள் நடைபெறும். ஆனால்  தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கின்றன.

இதே போன்று கடைசியாக நடந்து முடிந்த பங்களாதேஷ் டெஸ்ட் தொடரின்  இரண்டாவது போட்டியின் போது  முதல் மூன்று நாட்கள் மழை காரணமாக நடைபெறவில்லை , ஆனால் கடைசி இரண்டு நாட்கள் சிறப்பாக விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது.  ஆனால் இந்த போட்டியில் பெங்களூரு மைதானத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதால் இந்த போட்டி நடைபெறுமா அல்லது ரத்தாகுமா ?  என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த மைதானமானத்தின் ஆனது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். அதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வலைப்பயிற்சியில் சுழற்பந்தினை எதிர்கொள்ள  தீவிர பயிற்சியை மேற்கொண்டார். மேலும் சுழற்பந்து வீச்சாளர்கள் 3 பேரை ப்ளேயிங் 11யில் விளையாட வைக்க முடிவு செய்திருந்தார். ஆனால் மழை பெய்த காரணத்தினால் பிட்ச் வேக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மாறும் , சுழற்பந்து வீச்சாளர்களுக்கு  சற்று கடினமாக இருக்கும் என்பதால் ரோஹித் சர்மாவின் பிளான் சொதப்பியது.

எனவே இந்த மழையின் காரணமாக போட்டி நடைபெறுமா ? நடைபெற்றால்  அணியின் ப்ளேயிங் 11-ல் மாற்றம் ஏற்படுமா ? என பல கேள்விகள் எழுந்துள்ளன.

Previous articleநீங்க இன்னும் ரேஷன் கார்ட் வாங்கவில்லையா? தமிழக அரசு வெளியிட்ட குட் நியூஸ்!
Next articleரோஹிங்கியாக்கள்: ஹரியானாவில் காங்கிரஸின் உண்மையான ஆதரவாளர்கள் நூஹ் அம்பலம்