அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முன்னதாக சம்பள உயர்வு மற்றும் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை “
அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை ஆண்டுக்கு இருமுறை உயர்த்துவது வழக்கம். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப இந்த அகவிலைப்படி உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், அகவிலைப்படி சம்பள உயர்வு வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து அக்டோபர் 09 ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சம்பள உயர்வு குறித்து முடிவெடுக்கப்பட்டது.
மேலும் , மத்திய அரசு துறையில் வேலைப் பார்க்கும் 1 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வுதியக்காரர்களுக்கும் நல்லச் செய்திகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அக்டோபர் மாதத்திற்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வு கிடைக்கும். இதனுடன், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகையும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த மாதம் ( 25.09.2024 ) அன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சம்பள உயர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த மாதம் (09.10.2024 ) அன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சம்பள உயர்வு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அறிவிக்கப்படும். பொதுவாக, ஜனவரி மாத சம்பள உயர்வு மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும். ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் , இம்முறை சம்பள உயர்வு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது.