ஐசிசி மகளிர் டி-20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. நேற்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து இடையேயான போட்டி நடைபெற்றது இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாக கருதப்பட்டது.முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி லாவகமாக பௌலிங்கை தேர்வு செய்தது எதிராக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தொடக்க வீராங்கனைகள் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய நாட் –ஷ்கிவர் பிரண்ட் கடைசி வரை சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் விளாசினார். 20 ஓவர் முடிவுற்ற நிலையில் அணியின் எண்ணிக்கை 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் குவித்தனர். இதனை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீராங்கனைகளான ஹேலி மேத்திவ்ஸ் மற்றும் கியான் ஜோசப் இருவரும் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களுக்கு பவுண்டரிகளால் மைதானத்தை சுற்றி காட்டினர்.
இருவரும் அரை சதத்தை பூர்த்தி செய்தனர் விக்கெட்டுகள் ஏதுமின்றி 100 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீராங்கனைகள் 18 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் குவித்து சுலபமாக வெற்றி கனியை பறித்தனர். தொடர்ந்து 13 போட்டிகளில் இங்கிலாந்திடம் தோல்வியுற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த முறை இங்கிலாந்து அணியை வென்றது.
இந்த வெற்றியை தொடர்ந்து இரு அணிகளும் ஒரே புள்ளியை பெற்ற போதிலும் ரன் ரேட் அடிப்படையில் வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணி தனது மோசமான பவுலிங் மற்றும் பீல்டிங் காரணத்தால் அரையிறுதி வாய்ப்பை நழுவ விட்டது.
இதுவரை ஆஸ்திரேலியா மகளிர் அணி 6 முறையும் , இங்கிலாந்து அணி 1 முறையும் , வெஸ்ட் இண்டீஸ் அணி 1 முறையும் டி-20 உலக கோப்பையை வென்றுள்ளது. இதனை தொடர்ந்து அரையிறுதிக்குள் நுழைந்த வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லுமா என எதிர்பார்க்கப்படுகிறது.