டெல்லி அணியில் தமிழக பயிற்சியாளர்!! அந்த அணியின் புதிய திட்டம்!!

0
125
Tamil Nadu coach in Delhi team!! The team's new plan!!
Tamil Nadu coach in Delhi team!! The team's new plan!!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) ன்  18-வது போட்டியானது அடுத்த ஆண்டு 2025 மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,மும்பை  இந்தியன்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்க உள்ளன.

 இதன் வீரர்களுக்கான  மெகா ஏலம் வருகின்ற நவம்பர் மாத கடைசியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பணியாற்றினர். இவர் தலைமை பயிற்சியாளராக இருந்த போது ஒருமுறை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.

இந்த ஆண்டு ரிக்கி பாண்டிங் உடனான ஒப்பந்தம் முடிவுற்ற நிலையில் புதிய தலைமை பயிற்சியாளராக தமிழகத்தை சேர்ந்த ஹேமங் பதானி நியமிக்கப்பட்டதாக அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டது.  47 வயதான ஹேமங் பதானி இந்திய அணியில் 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 40  ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இவர் ஏற்கனவே  டி.என்.பி.எல் கிரிக்கெட்டின்  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும்,  ஐ.பி.எல் கிரிக்கெட்டின்  SRH அணியின் பீல்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளது.  அவரை தொடர்ந்து இந்த அணியின் இயக்குனராக இருந்த முன்னாள் இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலிக்கு  பதில் முன்னாள் வீரர் வேணுகோபால் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 இனி வரும் இரண்டு ஆண்டுக்கான பயிற்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.  அவர்களின் பயிற்சியின் கீழ் டெல்லி கேபிடல்ஸ் அணி கோப்பையை வெல்லுமா???

Previous articleஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வைத்த செக்!! மீண்டும் நடைமுறைக்கு வந்த பழைய திட்டம்!!
Next article2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படலாம்!! பிரபல அரசியல் தலைவரின் பேச்சால் பரபரப்பு !!